முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 31, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Book Bucket Challenge

Book Bucket Challenge க்கு அழைத்த  Thava Sajitharan   அண்ணாக்கு நன்றி.   (இந்த அண்ணாக்கு நன்றி, அந்த அண்ணாக்கு நன்றி எண்டு எழுதத் தொடங்கின 2009 வலைப்பதிவர் காலகட்டத்தை நினைச்சுச் சிரிக்கிறன். கெக்கெ பிக்கெ ) நான் ஒரு புத்தப்புழுவாய், புத்தகத்தின் குற்றுப்புள்ளிகளாய் இருந்த காலம் ஒன்றுள்ளது. அது இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கும் முந்தியது. புத்தகம் வாசிக்காட்டி, ஒருவேளை சாப்பாடு இறங்காத, ஜோல்னாப்பை( அதென்னமோ பை, இந்திய எழுத்தாளர்கள் புகுத்திவிட்ட சில பாசைகள், அது என்னெண்டு தெரியாட்டிக்கும், வாய்க்குள்ளாற இருந்து போகாது) ஜோல்னாப்பையை கொழுவிக்கொண்டு,வாரி இழுக்காத தலையுடன் புரட்சி வெடிக்கக் காத்திருக்கிற ஒரு "மனுசனாய்" பாவனை செய்து கொண்டு, (எவ்வளவு கேவலமான ஸ்ட்ரக்ரரைசேஷன்) குழந்தைமைக்கும், சமுகவியலுக்குமிடையில் அக்கபோரடைந்திருக்கிறேன்/ பல பேரை அக்கபோரடைய விட்டிருக்கிறேன். ஏனென்றால் அந்தக்கால கட்டத்தின் வயது 11,12,13,14.வயதுக்கும்,அனுபவத்திற்கும் நிறையத் தொடர்பிருக்கிறதுறு நம்புகிறேன். 2004 ஆம் ஆண்டுடன் என்னுடைய தீவிர புத்தகத்தேடல் வாசிப்புக் குறைகிறது. நாளொன