முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 15, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண் வெறுப்பு நோய்

அண்மையில் பரவி வரும் பெண் வெறுப்பு நோய் சம்பந்தமானது,  பெண்கள் மீதான இயலாமையை நினைத்துக் குமுறிக் குமுறி எல்லா இடங்களிலும் தமது தலையை பிய்த்துக்கொள்வதும், தாங்கொணா வயிற்றுளைவில் குடலேறிக் கிடப்பவர்களையும் பார்க்க முடிகிறது. மிக நல்லது.மீண்டும் மீண்டும் உங்களது நிலைப்பாட்டினை அருவருப்பு சார்ந்ததாகவே நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் நிரூபிக்கவும் தேவையில்லை, உங்களது இயல்பான குணாதிசயங்கள் அதுவாகவே வெளிவருகின்றது. எங்களுக்கு இது வேடிக்கையின்றி ஒரு பொருட் டும் இல்லை.  பெண்ணுடலை மோப்பம்பிடித்துப் பார்க்கிற பாலியல் வறுமையும், வசை வறுமையும் கொண்ட கூட்டங்களே, எழுத்தையும், திறன்பாட்டினையும் கூட உங்களால் அதைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. உங்கள் மன நோய்களுக்கு தக்க மருந்தினை உங்கள் வயதான காலங்களில் உங்களிடம் தர வேண்டாமே என்று பார்க்கிறேன்.  எனக்குத்தெரிந்து எந்தப் பெண்ணும் பிச்சை வாங்கிப் புத்தகம் வெளியிடுவதில்லை. எந்த ஆணினுடைய கையாலாகாததனத்தையும் பார்த்துப் பயந்ததும் இல்லை ;இந்தளவு நோய்க்கூறும் இனங்காணப்படவில்லை.  பெண்ணியலாளர்கள் , பெண் எழுத்தாளர்கள், பெண் களப்பணியா

பதில்

Writing, as an art, demands its own morality. Masters like Karl Marx changed the course of history and human thought through their writings. When writing becomes a mere weapon in the hands of reactionaries, the society is in danger of becoming morally corrupt. The irresponsible statements of some literary personalities have made the Tamil literary space vulnerable to such corruption.  The litera ry policing of Jeyamohan is almost unspeakable. Pro-establishment, pro-Hindutva, anti-minority, intolerance towards other religions, hatred towards left intellectuals, manipulation of history to suit his political standings and male-chauvinist high-handedness are among his major traits, as can be gleaned from his writings. His vicious statements against women stem from a deeply rooted patriarchal mindset that believes men are superior. We understand his psychological need to stay in the limelight forever – something that has been well-established when he has courted controversy throu

பாசிசப்பேரினவாதம்

இனப்படுகொலை மூலம் உழைக்கும் மக்களை அழித்தொழிக்கும் பேரினவாத,பாசிஸ்டுக்கள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் முசுலீம்கள் தாக்கப்படுவது திட்டமிட்ட பிரச்சாரங்களாலும், துண்டுப்பிரசுரங்களாகவும் அண்மைக்காலங்களில் பேரினவாதிகளால் உறுதிப்படுத்தப்பட்டதே, இருப்பினும் இன்றைய தினம் முஸ்லீம் மக்களின் வியாபார தளங்களும், வீடுகளும்,பள்ளிவாயில்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியும்,தகர்க்கப்பட்டும்,உயிரபாயங்களும் நேர்ந்துள்ளன.  மனிதக் கொலைகளை ஆதரிக்கும் அரசும், அரசின் ஆதரவோடு இயங்கும் மதப் போர்வைபோர்த்திய பேரினவாத மத இயக்கங்களும் கண்டிக்கத்தக்கன.  அளுத்கம இஸ்லாமியமக்களின் வீடெரிப்பு சம்பவம் தொடர்பாக பொதுபலசேனா மீதும், அரசாங்கத்தின் மீதும்  கண்டனங்களை பதிவு செய்கிறேன்  நிலா லோகநாதன்