ந.பாலேஸ்வரி அவர்கள் அண்மையில் காலமாகி இருக்கிறார். அவர் "ஓரளவுக்குப் பதிப்பித்த" தத்தைவிடு தூது எவ்வாறாகிலும் முக்கியமான பிரதியாகும். ஈழத்தைச் சேர்ந்த, பெண் விடுதலையை மையப்படுத்தி, பாரதிக்கும் முன்னதான காலப்பகுதியின் தி.த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய தத்தை விடு தூது,தூதுக்காவியத்துக்கு ஒரு மறுப்புப் பிரதியே ந.பாலேஸ்வரி அவர்களின் தத்தை விடு தூது விளக்கம். எனக்கு தத்தை விடு தூதின் 33 பாடல்களையும் அறிமுகப்படுத்தியது அவரது மறுப்புப் பிரதியே. இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னம், தத்தை விடு தூது செய்யுள்களுக்கு விளக்கவுரை எழுதத் தொடங்கினோம். என்னளவில் முடிந்தும் ஆச்சு. பதிப்பிப்பதற்கு நிதி வசதி போதாமையினால் அச் செயற்பாடு அப்போதிலிருந்து அப்படியே முடங்கியது. தத்தை விடு தூதை மறுத்து எழுதிய ந.பாலேஸ்வரி அவர்களும் காலமானார். அன்னாருக்கு எனது அஞ்சலிகள். தத்தை விடு தூது