வாழும் போது அதிகளவு கண்டுகொள்ளவில்லையோ என்ற எண்ணத்தைக் கொண்டுவரும் ஒரு கலைஞன். இன்று பொதுவாக ஒரு விடயத்தில் ஆளுமையாக இருப்பதுவே பெரும்பாடும், சவாலுமாகிறது. கைக்கெட்டிய எல்லாக் கலைகளையும் கைவரப்பெற்றிருந்த, பல பரிமாணங்களைக் தனித்துவமாகக் கொண்டிருந்த,ஈழத்துக் கலைஞன் அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களை நினைவுகூறுகிறேன். பின்னணி பாடல்கள் பாடுவதன் மூலம் எமது தலைமுறைக்கு பரீட்சயமானாலும், இவரொரு சிறந்த ஓவியர். கோட்டுப்படங்களை விரும்பி வரைபார். நவீன ஓவியங்களுக்கு தலைநகரில் முன்னோடியாக விளங்கினார். மேடை நாடகங்கள் பலவற்றில் குணச்சித்திர, நகைச்சுவைப் பாத்திரமேற்றவர். இயக்குனராகவும், எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் வானொலிக் கலைஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும்,பலகுரலில் தேர்ச்சி மிக்கவராகவும் தன்னை நிரூபித்தவர். ஈழத்தின் சிறந்ததொரு பல் பணிமானக் கலைஞரை நான் இழந்தோம். இன்று பல்கலைத் தென்றல் ஸ்ரீதர் அவர்களின் நினைவு நாள். இவர் தேர்ந்த கலைகள் ஏராளம் இருந்த போதிலும், இணைப்புத் தருவதற்கான ஆவணங்களை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் எவரும் இணையத்தில் உலாவ விடவில்லை என