முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 29, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதை ஒளி பற்றிய அறிமுகம்

கொஞ்சக் காலத்துக்கு முதல் கதை சொல்லடா தமிழா எனும் குழுமத்தை பேஸ்புக்கில் உருவாக்கினோம். அதனது கர்த்தா ஞானதாஸ் அங்கிள். நாங்கள் கொஞ்சப் பேர் மீளுருவாக்கக் கதைகள் எழுதினோம்.  கதை சொல்லடா தமிழா குழுமம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், எமது தலைமுறை மறந்து போயிருந்த கதை கேட்கும், கதை சொல்லும், கதை பரிமாறப்படும் ஓர் அழகியலை மீள நிர்மாணிக்கவே ஆகும்.   நாளடைவில் குழுமத்தில் ஏராளமான மீளுருவாக்கக் கதைகள், சிறு துணுக்குகள், நாடோடிக்கதைகள், நகைச்சுவைகள் என்று கதைகளுக்கு பஞ்சமே இருக்கவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் எம்மோடு இணைந்து கொண்டார்கள். அவர்களது துடிப்பான இயக்கம் எமது குழுமத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.  கதைகளை வாசிப்பதை விட, கதை கேட்டலிலுள்ள இன்பத்தை தர நினைத்தோம். கதை கேட்டலையும் விட, கதையை பார்த்துக் கேட்டல் எனும் visual apparent ஐ இன்னும் விருத்தி செய்ய, கதைகளை கதை சொல்லி ஒருவரைக் கொண்டு கூறுவித்து, கதை ஒளி வடிவங்களாக YouTube இல் பதிவேற்றினோம். கதை ஒளியை ஆக்குவதொன்ரும் அத்தனை இலகுவாக இருக்கவில்லை.  கதை ஒளி உருவாக்கத் தேவையான சாதனங்கள்,கதை சொல்லிகள் இவ