முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 1, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாங்களும் ஹட்டன் போனோம் :)

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சமுக மேம்பாட்டை அதிகரிப்பதற்கும், சிறுவர் துஷ்பிரயோகத்துக்கெதிரான சவால்களையும் அறைகூவல்களையும் அவர்களாகவே எதிர்கொள்வதற்கும் இளம் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் முகமாக லியோ கிளப்பினால் (ஆமா, சிங்கக் குருளைகள் ) ஒரு விரிவுரைக் கருத்தரங்கை ஏற்படுத்தியிருந்தோம் அந்தப் பாடசாலை தலவாக்கலையில் இருந்தது. அங்கே நாங்கள் போனோம். அந்த பயணம் தான்... ஒன்றர ை நாள் வீட்டை விட்டு வெளியே போவதுக்கான அனைத்துச் சம்பிரதாயங்களையும், அதான் வீட்டில் வசவு+பூசை+ஏகப்பட்ட திட்டு...இவ்வாறான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு சுமார் இரவு மணி எழுக்கெல்லாம் கிளம்பினோம். எட்டரை மணிக்கு ட்ரெயின் ;ஏழு சிங்கங்கள்! ட்ரெயினை பிடிக்கப் போனா, ட்ரெயின் ஓடிகின்னே இருக்குது. அதையும் ஒரு மாதிரி அடிச்சுப் பிடிச்சுப், பிடிச்சு அதில ஏறிப் பார்த்தா, இரண்டாம் கிளாஸ் பெட்டி பூரா ரெம்பி வழியும் பிரயாணிகள்! ராகம ஸ்டேஷனில் இறங்கும் ஒரு சிங்கள அங்கிளும், அக்காவும் தமது இருக்கைகளை, தமது தரிப்பிடம் வந்ததும் இருந்த மூன்று பெண்களுக்கும் இடம் உபயம் செய்தார்கள். இதில இருந்த ஒரு "