முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 29, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டில விசேஷங்க :)

I was rushing, really rushing....இப்பிடித்தான் கொஞ்சக் காலம் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு காலம் எண்டு தெரியேல்ல, கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள நிறையக் காலம்;அந்தக் காலம் பூராவும் சிலவற்றை மறந்து விட்டிருந்தேன். எங்கிருந்து அவை மீள வந்தன என்று தெரியவில்லை. ஒரு ஒற்றையடிப்பாதைக்குள், ஆள்த்தடயமில்லாமல் போய்க்கொண்டிருந்த இடத்தில், யாரோ மறித்து, கூடவே வருகிறது போல உணர்வு! இவ்வளவு அழகான உணர்வையா தொலைத ்துவிட்டு இருந்தேன்? இசையைப்பற்றி கதைத்துக்கொண்டிருக்கிறேன். அதை வாசிப்பதும், அதனுடன் கதைப்பதும், அதைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதும் ஒரு அலாதி சுகம். போனவாரம் தூசு தட்டி கீ போர்ட்டை கையில் எடுத்துக் கொண்டேன், இப்போது வரைக்கும் விலகிப் போக மறுக்கிறது. குழந்தையைக் கொஞ்சுவதற்காகத் தூக்கி வைத்துக் கொண்டால் எப்பிடி, மடியிலிருந்து இறங்கும்? கூடவே விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளத் தோணுகிற உணர்வுகளில் இதுவும் ஒன்று, வசந்தகாலத்தின் இன்னுமொரு சிணுங்கல் தொடங்கிவிட்டது மனிதன் எவ்வளவு ரம்மியமான உணர்வுகளோடு கூடிய மிருகம்? சிரிப்பும், கவலையும், கோவமும், குரோதமும் என்ன காரணங்களுக்காய்