முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 17, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கால முடிவில் வாழ்வைச் சந்தித்தல்

(கால முடிவில் வாழ்வைச் சந்தித்தல் - 17-06-2012  அன்று நடந்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டுவிழாக் கவியரங்கத்தில் வாசித்தது ) பி தாவே, நிச்சயம் நடக்கப்போகும் மரணத்தை, அது எப்போது நேரிட்டாலும், உமக்குள்ளே அதனை ஜெயத்துடன் சந்திக்க பெலன் தாருமென உம்மைத் துதிக்கிறேன்.ஆமென்! என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தரை அழிவைக் காணவிடமாட்டீர்; உமது சமூகத்தில் எனக்கு நிறைவான இறுதி மகிழ்ச்சியைக் காட்டுவீர்!!! உமது குறிக்கோள் எதுவாகினும் என்னை கைமீற  விடமாட்டீர்! உமது லட்சியத்தை என் மேல் திணிக்க மாட்டீர்! உமது வாழ்வாதாரங்களை நான் அழித்ததாய் நினைக்க மாட்டீர் ! எனது சாவில் உம் பங்கை உலகுக்குக் காட்ட மாடீர் ! ஆகையால் எனது ஸ்தோத்திரங்களை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொள்வீர் ஆண்டவரே, தனது முடிச்சுக்களில் இருந்து தானாகக் கழன்று போகும் தன்னையே மூச்சுத் திணறடிக்கும் என் வாழும் உரிமையைப் போல என் அகச்சுதந்திரம் போல இன்னொன்றைக் கண்டு பிடிக்கும் வரை -எனது கால முடிவை , வரை முறை/ மறு பரிசீலனை செய்வீர்களா ? தன் பாதையைக் கண்டறிந்த