முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 1, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழங்கவிதைகள் சில...

2007 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சில பழங்கவிதைகள். இந்தத் தொப்பி....... இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான். இன்னோரன்ன இழவுகளாலே இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான். அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார். இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார். ஒருவரும் தனக்கென்று சொல்லி தலை கொடாமல் சென்ற போது- அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து, முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம் வீணாய்ப் போனார் எம்மின மக்காள்! 2004 கற்புடை பாடலொன்று! பூனைக்குட்டிகளைச் சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும் பெண்களைப் பற்றி கற்புடை பாடலொன்று பாடவா? இறுதி முறையாக துயரப்பறவை வட்டமிட்டபோது, பூனைக்குஞ்சுகள் அடுப்பங்கரையச் சுற்றி வட்டமிட்டனவா? பெண்களே நீங்கள் அதனருகில் நிற்கும் வரை பாதுகாப்பாக குளிர்க்காய்வதாய் நினைத்துக் கொள்கிறீர்களா? பூனைகள் மீன்களை அடுப்பங்கரையிலிருந்தே விழுங்குகின்றன. நீங்கள் கழுவிய மீன்களைப் பூனைகள் விழுங்குதல் நியாயமாகப் படுகிறதா? ஒ..பெண்களே, உங்கள் பூனைகளுக்கு அடுப்பங்கரைக்கு வெளியில் உணவைத் தேடித்தாருங