முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 24, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவு உரு மாறல்.

தேவி எழுந்தாள், தென்மேற்காய் எழுந்தாள் ஆதி நிலவரம் அங்கங்கே நிற்க தேவி எழுந்தாள் பணிந்து போகிற பண்பான குரலில் முன்னெப்போதும் இல்லாத குரலில் தனது பலவீனம் பகை உணர்வானதெனக் கூறினாள். அக வலிமையையும் தன்மானத்தையும் தனக்கு உணர்த்தியதற்காக  எல்லா ஆள்வோருக்கும் நன்றி கூறினாள் மாட்சிமை தாங்கிய ஒரு கனவுக்காக, மற்ற நினைவுகளையெல்லாம் தர மறுப்பதாகக் கூறினாள் ஈட்டி பாய்ந்து கொன்ற  மேகங்களின் காம்புகளில் பெய்யக் கூடாத  மழைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் புரட்சிகளைக் கருத்தரிக்க நீ தேவையில்லை என்றாள்.   ***  தாகங்களை ஏரிகள் அறிந்தில்லாத ஒரு இரவில், பறவைகள் தம் கூட்டில் இயல்பாக  நித்திரை செய்த ஒரு இரவில் மனிதர்கள் வேட்டைக்குப் போக மறுத்த ஒரு இரவில், நம்பமறுத்த பொத்தல் ஒன்றை  அவள் கைகள் தாங்கிப் பிடித்தன. அழிந்து வருகிற நேயத்துக்கு அவள்  இரங்கற் பா பாட ஒத்துக் கொண்டாள். போராட்டமும், நிசமும் கலந்து போன வாழ்வில்,  நிச்சயமாய் அவனுக்கு குருதி சிந்தும். துயர் துடைத்து விடுகிற கைகள்  பக்கத்தில் இருப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை.