Resettlement Camp -Kilinochchi Central College மீள்குடியேற்றம் என்று இன்று பரவலாக அடிபடும் வார்த்தைக்குப் பின்னால் அம்மக்களின் உண்மை நிலை என்ன? மக்களின் சொந்தக் காணிகளில் அம்மக்கள் குடிஏறுவதற்காக , சிவில் மற்றும் அரசாங்கம் போட்டுள்ள சட்ட திட்டங்கள் யாவை? கிட்டத்தட்ட யுத்தம், பேரினவாதம் என்று சொல்லப்படும் சமாச்சாரங்கள் முடிவடைந்து, இற்றைக்கு ஓராண்டு நிறைவு பெற்றதன் பின்னரும், மக்கள் அவரவரது சொந்த வதிவிடங்களுக்குச் செல்வதை தடுப்பது எது..? இவ்வாறான கேள்விகளுக்கு நம்மவர் ஒருவரிடமும் விடை இல்லை. கிளிநொச்சி மாவட்டம், மீள் குடி ஏற்றத்துக்கென்று வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் மார்கழி முதலாந்திகதியில் இருந்து மீள்குடியேற்றத் திட்டம் அமுலாகிக் கொண்டு வருகின்றது. மொத்தக் குடும்பங்கள் 23,122 ஐயே கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்குள் ஏன் இத்தனை தாமதம்? வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள்,