முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 27, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பௌர்ணமிக் கிறுக்கு -01

இதோ இந்த புத்தன்   போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி வெளிச்சக் கூடுகள் மின்னி   ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி தாமரைக் கடவுளனுக்கு நீலோத்பலம் பிடுங்கி, சம்பங்கியும், பவள மல்லிகையும் சூட்டி, கண்களை மூடி மோனத்தின் உச்சியிலிருக்கும் புத்தன்- அதோ அன்று தான் பிறந்தான். ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து, காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன். அதோ அன்று தான் பிறந்தான்..! அவனது ,கேசங்களும் தந்தங்களும், அகவன்கூடும் தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே- முக்தியாகிப் போனான். புத்தா, சந்திக்குச் சந்தி, அரசமரத்துக்கு மரம் கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது- கடினமடா பார்க்க எனக்கு- அவருக்குத் தான் தூக்க முடியாத தொந்தி   நடுத்தெருவிலே குந்தி விட்டார். நீ கட்டழகனல்லவா ? கூடாது கடவுளே - நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே ! காசினியிலோ   கங்கையிலோ   குளித்து விட்டு "கப் " என்று இருந்திருக்கலாம். பாவி ... கடவுளாகிப் போனாயே ..!