முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 10, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கும், பூமிக்குமான நெருக்கம்.

எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்- பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான தூரத்திலும் குறுகி விட்டது- பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின், நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது- எனக்குமிருக்கின்றது- வேதனையின் பிரதி பிம்பம். நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்- தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது. ஹம்..... பெரு நாட்களின் கணக்குப் படி, தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம். இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது- சஞ்சலமான இமை முகத்தால். பெருஞ்சல்லாபத்தின் பேரில் நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை- கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது. சாலை வண்டிகளுக்கு எனது பெருந்துன்பம் தெரியா... புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில். உருவகங்களில், பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு- அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....! கனவு, மிச்சமிருக்கிறது, அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய, பழச் சோடா ரெப்பிக் கொண்டு குடித்து, ஏப்பம் விடுகிறாள்.- சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி வி

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-2

      BEGINNING OF  ETHNIC CONFLICT IN SRI LANKA  -Part 2  அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம் .  1948 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது இலங்கையின் மொழிக் கொள்கையில்  ஏற்படுத்திய மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனப்பிரச்சினையை உண்டு பண்ணின. 1956இல் திரு. பண்டார நாயகம் அவர்களது  ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்து 24மணி நேரத்தில் சிங்களம் அரசகரும ,நிர்வாக மொழியாக மாற்றப்படும் என்ற கோரிக்கையுடனேயே அரசு பதவிக்கு வந்தது. சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சிறப்பான நடவடிக்கையாயும் தேர்தல் வாக்கு மூலம் நிறைவேற்றப்படும் உன்னதமான தருணமாயும் இருந்தது .      ஆனால் தமிழ் மொழிக்கு, மக்களுக்கு, அரசினது கடப்பாடு  இல்லாத இச் செயல்  இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக  அமைந்தது. சிங்கள மொழி அரச கரும  மொழியாக்கப் பட்டதன் காரணமாக பல தமிழ் அரச ஊழியர்கள் ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பலர் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் சென்றனர். நேரடியாக தமிழர் ஒருவர் அரச சேவையில் இருப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.         . சம்பள ஊதிய

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-1

      அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம்.   மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குதலுக்குமான  ஒரு கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமான தொடர்பாடல் மையம் மொழி, அது பெரும்பான்மை, சிறுபான்மை  இரு சாராருக்கும் பொதுவானதே. இருப்பினும் பொது வழக்கில் அரச  கரும மொழியாக தத்தமது   சுய   மொழிப் இருப்பது குறித்ததே இன்றைய அச்சம்.  '' உங்களுக்கு இரு மொழியுடனான தேசமா? அல்லது ஒரு மொழியுடனான இரு தேசங்களா வேண்டும் ? எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் அதன் உட்கூறுகளின் ஒற்றுமைக்கும் ஆனா  வழி,  சமத்துவம் என்றே நம்புகிறோம் . இல்லையென்றால், ஒரு சிறிய நாட்டிலிருந்து இரத்தம் சொட்டுகின்ற துண்டாகிப் போன இரு நாடுகள் தோன்றும் -'' இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி மட்டும் என்று சட்டம் -1956நிறைவேறிய போது கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா தெரிவித்தது . இன்றும் இதுவே நாட்டில் இரு மொழி அமுலாக்கம் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.      அரசியலமைப்புக்கான 16ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்