முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 8, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதன் முதலாக நான் எழுதும் மற்றவர்களுக்கு புரிகின்ற பதிவு.

முதன் முதலாக நான் எழுதும் மற்றவர்களுக்கு புரிகின்ற பதிவு. தொடர் விளையாட்டு :) 1.அன்புக்குரியவர்கள்:     அன்பு செலுத்துபவர்கள் அனைவரும் :) 2.ஆசைக்குரியவர்:  வல்லவரையன் டோனி- நாய்க் குட்டி ! 3.இலவசமாய் கிடைப்பது:  வீட்டில சாப்பாடு... , 4.ஈதலில் சிறந்தது:       அன்னதானம். 5.உலகத்தில் பயப்படுவது: மனிதர்களின் கொடிய நாக்கிற்கு.....!                                                          6.ஊமை கண்ட கனவு:     நிறைவேறாட்டிச் சொல்லுறன்....., 7.எப்போதும்உடனிருப்பது:    ஒருபேனா! 8.ஏன் இந்த பதிவு:    இந்த ஒரு பதிவாவது மற்றவைக்கு விளங்கி, எனக்குப்      புண்ணியஞ்  சேர்க்கட்டுமெண்ட  நப்பாசை தான்.....   9.ஐஸ்வர்யத்தில் சிறந்தது:  படிக்கிற காலத்தில் கல்வி.                                                        உழைக்கிற   காலத்தில் பணம். 10.ஒரு ரகசியம்:   நான் கொஞ்சம் புத்திசாலி ;)  சொல்லாமையா போவன்...,                                   அதுக்குள்ளே என்ன அவசரம்..?  11.ஓசையில் பிடித்தது:   புல்லாங்குழழோசை :)                                     

நன்நிலை வாதம்.

மறை பொருள். சம்பவங்களைப் படிவகுக்கை செய்வது தொடர்பான ஆய்வு. தரவுகளை உதிரி உதிரியாகப் பிரித்துப் போட்டு ஒரு இலட்சிய வீழ்ச்சியை எதிர் நோக்கச் செய்வது நிகழ்வுகள், என்பவை எதற்கும் பிடிப்புக்கலல்லாத சிருட்டி பேதங்கள். இவை நேரத்தில் தங்கியிருக்கின்றன. ஆனால், சம்பவங்கள், நிகழ்வுகள் இரண்டுமே காலத்தில் தங்கியிருக்கின்றன. பரிணாமக் குன்ரலை ஒரு வகை யதார்த்தப் பின்னிணைப்பான ஒரோழுங்கில் படியச் செய்து, தடயங்கலாக்கலாம். இவை சம்பவங்களாகா; நிகழ்வுகளாகா சற்றே வேறு பட்டவை, வரலாற்றின் பாகங்கள். சம்பவங்களாயும் நிகழ்வுகளாயும் உரு வார்ப்புப் பெற்றவை செயற்கையான நேர்கோட்டுத் தளத்தில் இயங்குகின்றன. வார்த்தைகளைக் குழப்பிப் போடுவது போல, இது, ஒன்றுக்கொன்று முரண் தத்துவத்தை தருகின்றது . இனி, குலசாமி சொன்ன காதை. வீடு திரும்ப எத்தனிக்கின்ற எனக்கு காயங்களை மாற்றிவிடத் தோணுகிறது முதலில் சரிவர. பெருமிதமாக இருக்கின்றது, எனக்கான கேள்வியில் நாளிதழ்கள் விற்பனையாகுவது குறித்து - ஆயினும் சொற்ப உயிருடன் தனும் வீடு நல்கும் எனக்கு, குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியவில்லை.