Skip to main content

Posts

உழுவான் வண்டு

ஜெ ர்மன் நாட்டுக் கவிஞர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல் பூராவும் உழுவான் வண்டு (Colfax plowing bee) வளர்த்தல் தொடர்பான கதை. உழுவான் வண்டு செர்மனியில் இருக்கிறதா எண்டு நம்பிறதுக்கு எனக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் பிடித்தன. உழுவான் வண்டே நாலு குல பேதங்களில் ஆறு வர்ணங்களில் கிடைக்கிறது. கரச்சான் உழுவான்,நண்டு உழுவான்,பேய் உழுவான்,குதிரைப்பாச்சான் எண்டு நாலு குலங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. சாணிப்பச்சை,அரியதரக் கலர், தவிட்டுக்கலர்,அழுகின விளாம்பழ நிறம், மேலும் சொல்ல முடியாத சில வஸ்துக்களின் நிறம் எண்டு சுமார் எட்டு வகையான நிறங்களில் உழுவான் வண்டு பறந்தும், நடந்தும், ஊர்ந்தும், உழுதுகொண்டும் திரிகிறது.  உழுவான் வண்டைப்பற்றி இந்த சேர்மன் நாட்டுக் கவிஞர் எழுதியதெல்லாம் உழுவான் வண்டை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது எப்படி என்றே.சேர்மன் மொழி எனக்குத் தெரியாததால், ஆங்கிலத்தின் அதன் ஆறாம் பதிப்பொன்றை கொஞ்சக் காலத்துக்கு முன்பு ஒரு ரயில்ப்பயணத்தில், தண்ணீர்க் கடை ஒன்றில் வாங்கின புத்தகமொன்றில் படித்தேன். இதில என்ன விசேடமென்றால் உழுவான் வண்டு ஒன்றைப்

Overcoming a Rut: A Personal Journey

Falling into a rut is something that happens to all of us, but how do we get out? It can be hard to recognize when we're in a rut and to motivate ourselves to move on. I've been feeling less than my best lately; like my life is stuck in a rut. I've even found myself watching TV series to pass the time. Recently, I became obsessed with a Tamil show called "OFFICE" and watched all of it in a week. Now, I'm bored and feeling empty. TV shows aren't usually my thing, as I don't have the patience to wait until the end of an episode, and I don't have time to watch them all. Additionally, some people become so busy that they don't have time for leisure activities, and I'm in that category right now. I'm just going through the motions of my mundane tasks. I'm also really over summer. Sometimes I feel like I can't take another day in this hot weather. I've had some new experiences this summer because of my internship, one of which w

அப்பா சொல்லித் தந்த பாட்டுக்கள்.

மாலை நேரப்  பொழுதினிலே மாமரத்தைப் பாருங்கள் மஞ்சள் நிற இலையெல்லாம் மாறி மாறி விழுகுது சின்னஞ்சிறு  பூவுண்டு சிலதில் நல்ல பிஞ்ச்சுண்டு வண்டு வந்து மொய்க்கவே வாசம்  எங்கும் வீசுது - மாலை நேரப் பொழுதிலே மாமரத்திப் பாருங்கள்! கிழக்குப் புறத்து பெரிய மாமரத்தின் கிளைகளிலே, வைகாசி மாத மாவடு தோன்றும் வாசத்தோடு, முற்றத்தில் விழுந்து கிடந்த மாம்பிஞ்சுகளை, கூட்டிக் கொண்டே அப்பா எனக்காகச் செய்த பாட்டு இது.   அது ஒரு செங்கல் மங்கலான பொழுது இன்னமும் ஞாபகமிருக்கிறது.  (4/5 வயதுக் குழந்தைக்கு)  *** வெகுமதியாய் புகழ்ந்திடவே வெகுளி எங்கள் குழந்தைகளே.... வெள்ளை நிறக் குழந்தைகளை வேடிக்கைகள் பார்த்துடுவர்- விஞ்ஞானத்தின் விந்தைகளை அள்ளி அள்ளி வீசிடுவார்- அமெரிக்காவில், ஐரோப்பாவில் அழகழகாய் குழந்தைகள்- கைகள் தட்டி சிரிக்கிறார் கண்ணைக் கண்ணைச்  சிமிட்டுறார்- பறக்கும் தட்டு, பலூன்எல்லாம் விண்வெளியில் பறக்குதங்கு பேசும் பொம்மை, பேசும் நாயும் திருகிடவே  நடந்து போகும் பாழும் எங்கள் நாட்டிலே - பறந்து வரும் விமானமோ குண்டு வந்து போடுமோ? கொலைகள்  செய்து போகுமோ? என

வெலிவேரியா- குடி தண்ணீர் யுத்தம்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப்போர் நீருக்காக நிகழும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். ஏற்கனவே சிரியாவில் கடந்த ஆறேழு வருடங்களாக தண்ணீருக்கான யுத்தம் நிகழ்ந்து இலச்சக்கணக்கான மனித உயிர்கள் மரணங்களில் முடிந்தது. இப்போது இலங்கையில்.  பெருமாட்டி பஞ்சாயத்து வட்டப் பிளாச்சிமோடாவில் கோக்காகோலா, நிலத்தடித் தண்ணீரை அண்மையில் உறிஞ்சி, அம்மாவட்ட மக்களால் போராட்டத்தை எதிர்கொண்டது. வாரணாசிக்கு அருகே உள்ள மேஹ்டிகஞ்சில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கோலா நிறுவனத்தை மூட வேண்டி ஏற்பட்டது.  தற்போது, தரமான குடிநீர் கேட்டுக் கிளர்ந்து திரண்ட மக்களை அரசாங்கம் ராணுவம் மூலம் அத்துமீறச்செய்து மக்களை முடக்கிப் போட்டது. பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இருவர் கொல்லப்பட்டனர். தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் சிங்கள  மக்களுக்கே அரசாங்கம் தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது. கம்பஹாவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரானது,அம்மாவட்ட நீர் நிலைகளில் நேரடியாகக் கலந்துள்ளதால், அப்பகுதி மக்கள

Raising Awareness About Blood Donation Among Young Volunteers: Our Journey of Creating an Awareness Song

As young individuals with a passion for community service, we decided to undertake a project to raise awareness about the importance of blood donation among our peers. Our goal was to utilize our talents and resources to create something impactful and meaningful, rather than simply being idle. With the support of our university friends, we decided to create an awareness song about blood donation. However, during the audition process, we encountered a challenge in composing the song in Tamil. It became evident that an English version of the song would not only improve the concept, but also make it more widely accessible. Consequently, we shifted our focus to creating an English version of the song. This marked the first time that Sharmilan had composed a song, and we are proud to say that he did an excellent job. Praneev contributed the theme from one of his albums (Close Your Eyes) and I wrote the lyrics. The entire process, from start to finish, took approximately 12 hours and the s

Filmmaker Asoka Handagama Defends 'Ini Avan' amid Criticisms of Exploitation and Insufficient Character Development

In the north of Sri Lanka, the Tamilian people struggle to survive on the border between the Sri Lankan army and the LTTE. The film "Ini Avan" tells the story of a rehabilitated LTTE combatant who returns to his community after the Sri Lankan civil war. However, his return is not welcomed by the villagers and he faces challenges in starting a new life in his hometown. This film, directed by Sinhalese director Asoka Handagama, is notable because it is a Tamil-language film with broken Tamil Sega subtitles. Like many third world films, "Ini Avan" is a powerful experience for the audience. The film portrays the struggles of the Tamilian people and raises questions about whether it is exploitative to depict their survival. However, some of the scenes in the film are confusing and do not add much to the overall story. I had concerns about the film due to Handagama's previous work, "Take This Road" (2004). In a TV interview, Handagama stated that he has ov

Stand Up For Colombo's Trees;கொழும்பு மாநகர சபையின் மரங்களுக்காக எழுவோம்

Silent protest organized by the concerned citizens against cutting trees in Colombo on 29th of  November 2012 at the Reid Avenue in front of the Arts Faculty, University of Colombo. ( aka Philip Gunawardena Mawatha) சுற்றுப்புறச் சூழல் தொடர்பான எல்லாக் கருத்தரங்கங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மர நடுகை பற்றியும், பசுமை நகர் பற்றியுமான விவாதம் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பௌதீக சூழல் வெப்பமயமாதலுக்கு பச்சை மரங்களது தேவையும் சுவாசத்துக்குத் தேவையான சுகாதாரமான ஒட்சிசனைப் பெறுவதற்கும் மரங்கள் இன்றியமையாதவையாகும். சூழல் வெப்பநிலையுடன், வளி பதமாதலுடனும் காற்றின் ஈரலிப்பைத் தக்க வைத்திருப்பதற்கும், கணிசமானளவு தொடர்பு படுத்திக் கூறப்படும் புள்ளி விபரங்களில் காடழிப்பும், மரவரிவுமே அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பினும் ;அவற்றின் கால அமைவுகள் வெவ்வேறான பின்னினைப்புக்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், கடந்த வாரங்களில் கொழும்புப் பல்கலைக்கழக வீதியோர மரங்களின் அறுப்பு மிகப் பாரதூரமான மனித வளச்சுரண்டலாகும் . கொழும்பு மாவட்டத்தின் சுமா

ஒரு கதை :)

ருக்மால் செனவிரெத்தின ஆகிய கணவனும் துலாஞ்சலி பியுமிகா வன்னப்புகே ஹிமேஷ் ருக்மால் செனவிரெத்தின ஆகிய மனைவியும்.... இ ண்டைக்குக் காலமை நடந்த நிசக் கதை, , தொழில் நிமித்தமா அலுவலகத்தில் (வருசத்தில ஒரு நாள்த் தான் தொழிலுக்கே போறது, அதில தொழில் நிமித்தமா  வேறயா எண்டு கேக்கப்படாது  ) மனைவி -கணவன் இருவருக்கும் விவாக இரத்துக்கான கவுன்சிலிங்  வழங்க வேண்டி இருந்தது. அவர்கள் தம்பதிகளாகி   ஏழு வருடம். இவ்வளா காலமும் எப்பிடி ஒண்டாக் குப்பை கொட்டினாங்களோ எண்டு மூக்கில விரல் வைக்கிரளவுக்கு   அலுவலக அறைக்குள் நுழையும் போது சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளோடு வந்து சேர்ந்தீச்சினம். சில வார்த்தைகள் எங்கையோ எனக்குக் கேட்டாப் போல இருந்தாலும் சரியா விபரம் அறிய முடியேல்ல, எனக்கொரு நண்பர் இருக்கிறார்,சென்சார் வார்த்தைகளில வல்லவர் ; இனிமேல்,  ஏதாவது கிரகக் கோளாரில அவரோட  கதைக்க முடியிற போது , அவரிட்டைக் கேட்டால்ச் சொல்லுவேர்   என்று அவற்றைக் கண்டும் காணாததுமாகக் குறிப்பெடுத்து வைப்பமா எண்டு யோசிக்கிறதுக்குள்ள , ரெண்டு பெரும் வந்து சேர்ந்தீச்சினை. ஏறத்தா

பொதுவுடைமைப் பாடலொன்று!

முத்தமொன்று முடியும் போது காதல் முடிஞ்சு போகுது -கண்ணையா ! உன் முதுகுத் தண்டில் வீரம் பாய்கையில் அதுவும் பழசாய்ப் போகுது -சின்னையா ! பித்தம் ஏறித் தலைக்கணம் கூடையில் வாழ்க்கை சிதைஞ்சு போகுது -கண்ணையா ! நித்தம் நாமேன் நிமிர்ந்து எழுந்து- யுத்தம் செய்தால் என்னய்யா ? அச்சம் பயிர்ப்பு அடிமைகள் உடைப்பு அவரவர் அளவுக்கு ஏத்தாப் போல் சித்தம் போன போக்கைக் கொஞ்சம் சிதைச்சு வெச்சா என்னய்யா ? அடுத்தவர் பிழைப்பும் அடிமைக்குச் சோறும் அதுவும் நம்ம வாழ்க்கை தான்- அரமணை போல இருக்கிற வாழ்க்கை அதுவும் நமக்கு கீழை தான் ! இருக்கிற சோற்றை இரவலா வாங்கி இனிக்கிற வாழ்க்கை எதுக்கையா? இனி, இனிக்கும் இறுக்கும் எல்லாம் சிறக்கும்-சொன்னால் கொஞ்சம் கேப்பாயா ? ஓடுற நதியில் ஒரு பகல் தின்று ஒடுக்கும் மனிதரை ஓசையில் வென்று ஆடுற மழயில் அரை வரை நனைஞ்சு அங்கொரு தீயைச் சமைப்போமே ! மூழ்கிற வெள்ளம் தலை வரை வந்தால் மொண்டு கடலைக் குடிப்போமே ! சாகிற வரையில் சரிசமனாக சரிஞ்சும் வளைஞ்சும் கொடுப்போமே ! போகிற பாதை புதுசெனத் தெரிஞ்சால் புலரும் வரையில் க