Skip to main content

Posts

சில புகைப்படங்களும், பாடல்களும்

வெட்டியா இருக்கும் போது, எட்டின தூரத்தில இருக்கிற Zoo க்கு போயிட்டு வாறது வழக்கம். அப்பப்ப கிளிக்கினதுகள் தான் இவை. கீழே சுட்டிகளில் தந்திருக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே படங்களைப் பாருங்கள். ராரே ராபி.... மாத்தளன் பாடல்   அகர் பேவா துஜ்கோ...   வரம் தந்த சாமிக்கு... பூந்தளிர் ஆட...   என்டே ஸ்வப்னத்தின்...   ஒர்மகளே கைவள... பனி விழும் மலர் வனம்... பனி விழும் இரவு... தென்மதுரைச் சீமையிலே... பட்டுக்கோட்டை பாடல் உன்னையறிந்தால்..நீ உன்னையறிந்தால் தமிழே தேனே...

மூக்கினால்ப் பாருங்கள் ...

                                                                                             என்னிடத்தில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டும், அது என் பற்றியதல்ல -  அது , வெட்ட வெளி நிலத்தின் ஊடு பாயும் கதிர்க் கற்றையிலிருந்து, பிளந்து வரும் ஏழாவது நிறத்தின் மக்கிப் போன சாயம் தாங்கிய நிழல் ! அது ஒரு வகை பெருமிதம் ; களிப்பு ! என்னில் இருந்து நிழல் விலகத் தொடங்கும், கடைசிப் பௌர்ணமியின் இருட்டில், அதனது சாயம் வெளுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கும்... என் மூக்கை தொடர்ந்து உற்று நோக்கினால் , என் வெளுத்த சாயம் வெளியேறுவதை எல்லோரும் அவதானிக்க முடியும்! கண்களினால் பார்ப்பதைத் தவிர்த்து மூக்கினால் பார்ப்பதற்கு அவன் என்னைப் பழக்கினான். மூக்கினால் பார்ப்பவர்களுக்கு மட்டும் வெளுப்பின் நிறம், மக்கிய சாயம், ஆவி போல் அந்தரத்தில் அலைவது தெரியும். கடவுள், நிழலை ஒரு சன்னத்தின் தெறிப்பாய்ப் படைத்திருக்கிறார். சன்னம் தெறிக்கையில் என் மீ உந்தம் , இடப் பரவலில் இருந்து ஒடுங்கிக் கொண்டு விடுகிறது. அந்த அற்புதங்கள் மூக்கினால்ப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும். மூக்கி

டொஹோல்லாவ்'வின் ஒரு பிரஞ்சுக் கவிதை.

Glass Door -Pages aquarellées  -1989 Ici rien ne se passe Tout est dehors Le temps se plie comme un vêtement Dans un coin La mer rentre par transparence Par la porte de verre L’eau de la lumière tremble Sur les murs lisses Prison ou sanctuaire Fermé à double tour Par le regard même La paix de l’instant se boit Dans une coupe sans bord Là-bas un bateau gîte Toutes voiles dehors Et avec l’écume bleue Je mouille la page கண்ணாடிக் கதவு  -Pages aquarellées  -1989 தொகுப்பிலிருந்து   காலம், மடிக்கப்பட்ட கோட்டைப் போல ஒரு மூலையில் கிடக்கிறது, இங்கு எதுவும் நடப்பதற்கில்லை. எல்லாம் மறுபக்கத்தில்! வெளியே  , பாய்மரத் துணியின் படங்கில் தெறிக்கும் நீலத்தில், கப்பல் வரிசையில் நிற்கிறது. நான் காகிதத்தை ஈரமாக்கினேன் ; நீர் சூழ்ந்த வெளிச்சம் தளம்புகிறது! விளிம்பில்லாத கோப்பையில் குடிக்கப்பட்டிருக்கும், கடல், தெளிவுடன் கண்ணாடிச்  சுவரினூடாகவும், சன்னலினூடாகவும் நோக்கி வருகிறது. அதனுடைய பார்வையில் சாத்தப்பட்டிருக்கிற , சிறை அல்லது சரணாலயம் -இரண்டிலொன்று !- அதுவே அதனது உடனடிச் சமாதானம் !   தமிழில்,

மேற்செம்பாலையும் மினக்கெட்ட வேலையும்

இசை பற்றி ஏதாவது குறிப்பு எழுதவேண்டும் என்று நினைக்கும் போது மட்டும் நேரம் கிடைப்பதில்லை என்று ஆகிவிடும், அடிக்கடி எழுதும் கவிதைகளை இவ்விடம் புறக்கணிக்க. நேற்று நிலைச் செய்தி/ நிலைபரம் போட்ட, "நினைத்து நினைத்துப் பார்த்தேன் ", '7G, ரெயின் போ கொலனி' படப் பாடலுக்கு அவ்வளவு அமோகமான வரவேற்பு, எல்லாரும் பாதிக்கப்பட்ட மக்கள் தான் போல.ஒரு கட்டத்தில் என்னுடைய நிலைத்தகவலை என்னுடைய பாதுகாப்புக் காரணமாக இரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் மறைக்க வேண்டியதாய்ப் போச்சு. அதற்குப் பிறகு நிறைய நண்பர்கள் அதனுடைய இசைக் கோர்வை வடிவத்தை முடிந்தால்த் தரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள், [ அவை யாருக்கும் அதை நான் தருவதாக பதில் அனுப்பவே இல்லை எண்டது வேற கதை ] இந்தப் பாடலை நான் கீ போர்ட்டில் வாசித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக இருக்கும், இசை வடிவத்தில் வாசிக்கவே கூடாது என்று இறுக்கமாக வைத்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கடைசியாக நண்பி ஒருத்தியின் பிறந்த நாள் வைபவத்தில் வாசித்து, எல்லோருடைய "மூட்" டையும் மாத்தி விட்டதாக ஞாபகம். நண்பிகள் நிறையப் பேர் வீட்டுக்

இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது.....

                                                          சித்திரை போய் வைகாசி வந்தாலும் ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல் நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்; இன்னும் பிற கக்கணம். நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும் மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும். ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான். கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் ! வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும் குறுனிப் பேத்தைக்களுமாய்  தவம் கிடக்கும். நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது ! நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா? கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம். புள் உரசும் ;போகம் காட்டும் சத்தமிடும்; சரசம் காட்டும் ! சன்னத உச்சியில் ஒரு குருவி வேட்டைக் காரனின் கவணுக்கு இலக்காகும். நீ துயில் களைந்து எழும்புவாய், நான் தூங்காத பலநாளின் கதை சொல்லுவேன். கோடை கழிந்துவிடும். கொடும் வெயிலில் நீ புழுத்திருப்பாய். ஆடை அற்ற அன்பில் ந

மறுக்க அழையுங்கள்...

                                                              நான் கொதிக்கும் உலையில் இருந்து விடுபட்டு- அந்தம் ஒழிக்க, எனக்கென இருக்கும் ஒரு பகலோ இருபகலோ போதாமல் போகும். வாமன உருவத்தில் இருந்த வலி காணாமல் நீண்டு பெரும் இராக்கதனாய் அவதரிக்கும். பார்- நீ ஒரு நாள் சினம் கொண்டு எழுதலில் இருக்கும் தீவிரம் அனுதினம் எனக்குள்ளே பொங்கிப் பிரவகிக்கும். கடல் ,வெளிகள் ,மவுன மலைகள் தாண்டி எதிரொலிக்கும். யாரையும் வாழப் பிரியப்படாமல்- ஓசை முறித்துக் கொள்ளும் -உணர்வலைகள் ! பொங்குதலில் உள்ள லாபகரம் என்ன தெரியுமா? ரகசிய சந்திப்புகளில் புரியாத வார்த்தையற்ற விரவும் வெளிகள்- தாம் ! புல் நுனியில் காலம் பனி தட்டி எழுந்து கூத்தாடும். புலர்தலுக்கு முன்னே பூப்பெய்தும். புருட சுகம் ஒன்றினையே  புணர்ந்தலையும் ; புல்லுருவி வாழ்க்கையில் இருந்து வெளியேறும். நல்லினக்கமில்லா  நகைப்புக்களை  நரிக் குளிப்பாட்டும். நானெனும் தனியுடமை தங்கித் தங்கி பல திசைகளில் காடு, சமுத்திரம், கரு மரப் பொந்துகள், இருட்டில் நீ அகன்ற வானம் இல்லாது என்று போன அணியட்கைச் சபலங்கள் ,

நினைவு உரு மாறல்.

தேவி எழுந்தாள், தென்மேற்காய் எழுந்தாள் ஆதி நிலவரம் அங்கங்கே நிற்க தேவி எழுந்தாள் பணிந்து போகிற பண்பான குரலில் முன்னெப்போதும் இல்லாத குரலில் தனது பலவீனம் பகை உணர்வானதெனக் கூறினாள். அக வலிமையையும் தன்மானத்தையும் தனக்கு உணர்த்தியதற்காக  எல்லா ஆள்வோருக்கும் நன்றி கூறினாள் மாட்சிமை தாங்கிய ஒரு கனவுக்காக, மற்ற நினைவுகளையெல்லாம் தர மறுப்பதாகக் கூறினாள் ஈட்டி பாய்ந்து கொன்ற  மேகங்களின் காம்புகளில் பெய்யக் கூடாத  மழைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் புரட்சிகளைக் கருத்தரிக்க நீ தேவையில்லை என்றாள்.   ***  தாகங்களை ஏரிகள் அறிந்தில்லாத ஒரு இரவில், பறவைகள் தம் கூட்டில் இயல்பாக  நித்திரை செய்த ஒரு இரவில் மனிதர்கள் வேட்டைக்குப் போக மறுத்த ஒரு இரவில், நம்பமறுத்த பொத்தல் ஒன்றை  அவள் கைகள் தாங்கிப் பிடித்தன. அழிந்து வருகிற நேயத்துக்கு அவள்  இரங்கற் பா பாட ஒத்துக் கொண்டாள். போராட்டமும், நிசமும் கலந்து போன வாழ்வில்,  நிச்சயமாய் அவனுக்கு குருதி சிந்தும். துயர் துடைத்து விடுகிற கைகள்  பக்கத்தில் இருப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம்

நாம் கைகள் உயர்த்தி எழும்ப வேண்டும். காசுக்கு விற்க இயலாத இந்த நீண்ட காலக் காத்திருப்பின் அவசியம் பற்றி நிரம்பி வழிகிற பசுமையான நேர்கோட்டின் வீழ்ச்சியில்- வாயைக் காதுகள் மறைக்கும் போது, உரக்கச் சொல்ல வேண்டும். சிறப்பான தருணத்தில் மட்டுமே சிரிக்கும், வெகு சராசரியான பற்களை, நீவி விடவ விட வேண்டும். இன்பம் நிகழுவதாயும் துன்பம் நேருவதாயும் ஏனென்று யோசித்து ஊக்கமற்றதாக்கும் இரண்டு வேறு நடப்புக்கள் இருப்பதை - குழந்தையொன்று கருவிலே வீற்றிருப்பதைப் போல நிச்சயமற்றதாக உணர வேண்டும். அந்நிச்சயமற்ற குழந்தையும் கலைந்து , இன்பமானதல்லாத அதன் இறப்பை நேசிக்கையில், அதை நான் வென்று விடுவேன். இன்னமும் பிறக்காத அதன் கண்களுக்கு உம்முடைய புரட்சியெனும் பொய்யை உரைப்பேன். நீர், எனது சொற்களைக் கூர்ந்து கவனிப்பதால் அவை உமது கொலைகளை நியாயப்படுத்தும் என்றில்லை; உலகில் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளதென்பதும் தவறு ! தயவு செய்து திருந்தாது இருங்கள் - அதன் பின்பு புது வாழ்வு எழும். ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம். -நிலா