Skip to main content

Posts

ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம்

நாம் கைகள் உயர்த்தி எழும்ப வேண்டும். காசுக்கு விற்க இயலாத இந்த நீண்ட காலக் காத்திருப்பின் அவசியம் பற்றி நிரம்பி வழிகிற பசுமையான நேர்கோட்டின் வீழ்ச்சியில்- வாயைக் காதுகள் மறைக்கும் போது, உரக்கச் சொல்ல வேண்டும். சிறப்பான தருணத்தில் மட்டுமே சிரிக்கும், வெகு சராசரியான பற்களை, நீவி விடவ விட வேண்டும். இன்பம் நிகழுவதாயும் துன்பம் நேருவதாயும் ஏனென்று யோசித்து ஊக்கமற்றதாக்கும் இரண்டு வேறு நடப்புக்கள் இருப்பதை - குழந்தையொன்று கருவிலே வீற்றிருப்பதைப் போல நிச்சயமற்றதாக உணர வேண்டும். அந்நிச்சயமற்ற குழந்தையும் கலைந்து , இன்பமானதல்லாத அதன் இறப்பை நேசிக்கையில், அதை நான் வென்று விடுவேன். இன்னமும் பிறக்காத அதன் கண்களுக்கு உம்முடைய புரட்சியெனும் பொய்யை உரைப்பேன். நீர், எனது சொற்களைக் கூர்ந்து கவனிப்பதால் அவை உமது கொலைகளை நியாயப்படுத்தும் என்றில்லை; உலகில் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளதென்பதும் தவறு ! தயவு செய்து திருந்தாது இருங்கள் - அதன் பின்பு புது வாழ்வு எழும். ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம். -நிலா

ஆண் பெண் பாலினப் புரிந்துணர்வும், பெண்ணின் தளமும், பண்பாட்டுத் தளத்தின் நிறுவனமயப்படலும்.

                                                              உ யிரியல் ரீதியாக இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண்,  இடை நிலைப்பாலினர் என மூவகைப் பாலினம் மனிதர்கள் எனும் இனப்பிரிவில் காணப்படுகின்றது. [இனம் என்பது, ஒரே குறிப்பிட்ட நிலப்பரப்பில் பொதுவான பண்பாட்டுடன் வாழக்கூடிய பொது இயல்புடையவை ] இந்த மூவகையில் ஆண் , பெண் எனும் இரண்டு பாலினங்கள்  மனித உலகின் இனவிருத்திக்கும்,அவற்றின் நிலவுகைக்கும் ஆதாரமாயுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கவும், ஒன்றை ஒன்று ஆதரிக்கவும் வார்ப்புப் பெற்றவை. ஆண் மட்டும் உள்ள ஓர் சமூகத்தை கற்பனை பண்ணிப் பார்க்கையில் சமுகத்தில், பெண் அமர்த்தப்பட்டுள்ள இடமும், பெண் மட்டுமே உள்ள சமூகத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கையில்  ஆணின் சமூக இடமும் தெளிவாகக் கூடியவாறு இருக்கும்.  இதில் மனிதன் வகுத்த பண்பாடு என்பது ஆண் -பெண் என்கிற இணைகளின் இயற்கைக்கும் , சமூகத்துக்கும் இடைப்பட்ட மாற்றுமையாகும். அல்லது பிறிதொரு கட்டமைப்பு ஆகும். பண்பாடு என்றால் என்ன என்று பார்த்தோமாகில்,  மக்கள் கூட்டம் கணக் குழுவில் இருந்து இனக்க

எதிர்க்காமல் இருத்தல் என்றால் சார்பாக இருத்தலுமே ; ஆம் !

நீ என்ன தேவைக்காக என்னை நோக்கிப் படையெடுத்து வருகிறாய் என்றோ, என்ன தேவைக்காக  உன் முரட்டுப் படைகளை என்னிடம் அனுப்புகிறாய் என்றோ  நான் இதுவரைக்கும் தெளிந்ததில்லை.  இருந்தும் என் தேவை குறித்து உன்னிடம் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். சொல்லப் பட்ட தேவைகளுக்குள் இருந்து தெளிவாக, சொல்லப் படல் எனும் வார்த்தையில்  மழுப்பிய வார்த்தைகளை நீ கண்டு பிடித்துத் தருகிறாய். நான் சொல்லாத ஒவ்வொரு வார்த்தையையும் எனக்குள்ளே நீவி விட்டு,  அடிக்கோடிட்டுக் காட்டுகிறாய். எனக்கு எல்லாக் கோட்டுக்குப் பக்கத்திலும்  இன்னொரு கோட்டைப் போட்டு பெரிதாக்கும்  பணி தெரியவில்லை.  உனக்குத் தெரிந்திருக்கிறது. கோடுகள் பற்றி சமாமாயோ, சமாந்தரமாயோ  நாங்கள் வாழ்வது பற்றி  நான் உனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறேன்.  நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்,  என் கேள்விகள் பதில்கள் அற்றுப் போனவையாக  உன்னிடம் மட்டும் சோர்ந்து விடுகின்றன. மறுபடியும் ஒரு நாளும்  நான் உன் கனவுக்குள் வலுக்கட்டாயமாக புகவில்லையா?  உன் ஒருநாளின் நினைப்புக்குள் என் எதிர்த் தோற்றம் தனும் வரவில்ல

கதவுகளைத் திறந்து விடுங்கள் ...

கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , எந்தக் காலத்திலும் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் நம்மைப் பழிவாங்கியவை அவை கதவுகள் லேசுப்பட்டவை அல்ல , நாங்கள் தட்டத் தட்டத் திறவு கொள்ளாமல் பழியை வாங்கியவை அவை. எங்கள் வீடுகளில் கதவுகள் மரம் கடைந்தும், வசதிப்பட்ட வீடுகளில் இரும்பும், துரும்புமாயும் காகமிருக்கக் கொப்பாய் உயர்ந்து நெடுந்து , வளர்ந்து காவலிருக்கும். கதவுகள், சின்னஞ்சிறு  குழந்தைகள்,  தொங்கித் தொங்கி ஊஞ்சலாட வாய்ப்புக் கொடுக்கும். எல்லாக் கதவுகளும் யாரையாவது காவலிருப்பது குறித்து ஒரு நாளோ இரு நாளோ தயக்கமடைந்திருக்கும். அல்லது வெட்கப்பட்டிருக்கும்.  அடைக்கலம் தந்த கதவுகளும் இருக்கின்றன. காட்டிக் கொடுக்கத் திறந்து கொண்ட கதவுகளும் இருக்கின்றன... கதவுகள் எங்கள் பாட்டிகள் மாதிரி,  மூதாதைகள் மாதிரி, சின்னச் சின்னக் கதைகளை கதவு இடுக்குகளின் துவாரம் வழியாக யாருக்கும் பதனிடாத புதுக் காற்றில் சேமித்து வைத்திருக்கின்றன.  இன்னொரு இன்னொரு தலைமுறைக்காக  கதவுகளை நம்பி நாம் துயில் கொண்டோம்... எங்கள் பெண்களின் சொல்லக் கூடாத  கற்புகளை கதவுகளுக்கு

சொர்க்கத்தின் குழந்தைகளும், காலத்தின் முரண் பிணக்குகளும்

நிறையக் காலத்துக்கு முன்பாக என்று சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு முன்னதாக...ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்தை அதற்கு முன்பாகவும் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.  ஏன் எப்போதுமே படங்கள் காலத்தின் பக்கம் சார்ந்தவையாக இருக்கின்றது என்பது பற்றி மட்டும் எனக்குத் தெளிவே இல்லை. சினிமாப் படங்கள் நான் பார்ப்பது மிகக் குறைவு என்று சொல்லலாம், அல்லது பார்த்த படங்கள் மிகக் குறைவு என்று சொல்லலாம், இரண்டுமே ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால், முந்திப் பார்த்த படங்களை , இப்பக் கொஞ்ச நாளா திருப்பியும் பார்த்துவிட வேண்டும் என்கிற அவா அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நான் காலத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் காலம் இனித் துரிதமடையப் போகிறதா, இல்லை தீர்ந்துவிடப் போகிறதா , இல்லை திடீரென்று வாழ்க்கை பற்றிய தீவிர அவாவா என்று தெரியவில்லை. முந்திக்கும், இப்பவுக்கும் என்னில் நிறைய மாற்றங்கள். ஒரு வேளை காதல்க் கவிதைகளெல்லாம் எழுதுவதில்லை என்று சபதமெடுத்துக் கொண்டிருந்த நான் காதல்க் கவிதைகள் எழுதுகிற அளவுக்கு  வளர்ந்துவிட்டதாலாக இருக்கலாம்.    முந்திய என் கவிதைக்கும்