Skip to main content

Posts

நான் ஒரு பேசப்படும் பொருள்

மரங்கள் அடர்ந்த காட்டுச் செடிகள் உதிர்ந்து உலருவதைப் போல ஒவ்வொரு இதழாக, உதிரி உதிரியாக நினைவுகளின் அடிக்குறிப்புகள் முகிழ்ந்து எழுந்துகொண்டிருந்தது. எனக்கு நினைவுகளில் இருந்து மீண்டு கொள்கிற தோரணை அல்லது அந்த வித்தை அடிப்படையிலேயே தெரியவில்லை. எனக்கு முன்னால் போகிற நிழல் என்னை விட ஒரு படி முன்னால் போகிறது என்பதை மட்டும் என்னால் உட்கார்ந்து யோசிக்கக் கூடிய தெளிவு இருக்கிறது. மற்றும் படி நான் மிகுந்த குழப்பமான மன நிலையில் இருந்தேன் போலும்.  நான் பழகி வாழ்ந்த தெருக்களில் என்னைக் கவனிப்பவர்கள் குறைந்து போனதையிட்டு ஒருவித மகிழ்ச்சி. இதைத்தான் காலம் பதில் சொல்லும் என்று பலர்  சொல்லுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பேசப்பட்ட காலம் முடிந்து என்னைப் பற்றிப் பேசப்படுகிற காலம் எழுந்த இந்த கூர்ப்பு மாற்றத்தை நான் கொண்டாடுவதா இல்லையா என்றும் தெரியவில்லை. நான் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஒரு வணிகப் பத்திரிக்கையின் கிசுகிசுக்களுக்கு ஒப்ப நான் ஒவ்வொருவர் காதுகளிலும் கோலாகலமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆதரவுகளும் அதிகம், என் பக்கம் நியாயமும் இருக்கிறதாம். 

பிச்சிப் பெரும்பாடல் !

ஒய்ய நினவாத ஒன்கடலும் வீழாத, பைய நடவாத பாலுருகிப் பாடாத, ஐய, உன்னை அன்றி ஆயகலை அறியாத, செய்ய அறியாத சேதி அறியாத, கொய்ய மலர்ப்பங்கு கோதிக் குலையாத, பொய்ய உரைத்தாலும் போதும் மறையோயே !  வெங்கு புலையோயே வேறு விளையோயே ! அங்கு அலையாயே ஆழி மழையோயே ! பங்கு சிறுத்தாலும் பாதி கறுத்தாலும்- எங்கும் உனைத் தேடி ஏங்க வைத்தாயே ! வெம்புனல் தீ பெய்து,சங்கர,கனல் செய்து, கொங்கு நின் கோ கழல் பூட்டி, அம்புவி ஆர்த்தெழ வேண்டி, என்புரு ஏய்த்து மாய்த்து, அம்பு நின் அன்பு பாய்ச்சி, ஆணவம் அடியோடழித்து, கொன்றையில் கிலுகிலுப்பை செய்து, கிண்டியில் வேதம் பாய்ச்சி, ஒன்று நான் செய்யப் போக, ஒன் நிழல் ஓய்ந்து போச்சு ! உருவுடையார் எலாம் காண நிற்கிலர்- பெருவுடையார் தோற்றமேலாம் போல நிற்கிறர்- கருவுடைக் கொற்றமெலாம் தீது தைக்கிறர்- தெருவிடையோர் போதல் இன்னும் தேக்க மறுக்கிறர்- தேர்ந்து சொல்லும் வாய் முதலே தெரிதல் பிழையோ-  கூர்ந்து கொல்லும் ஆயுதமே குணத்தில் வெல்லோ?  தேர்ந்து சொல்லச் சேதியில்லை - இங்கோ , நானோர்ஆவுடையாக் கோலமென இப்போ வாய் பிளக்கக் கண்டாய்...!  

இயல் ஒன்று தருவே !

                              விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ- பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-  கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ - என்றும் தகல் விளங்கா பெரும்  தருக்கமும் நீ ! கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ துணை வளவா இணை வளவா பிணை வளவா பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ ! பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே  கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின் தன்னும் வேண்டா தனையும் வேண்டா  தானொடு அடங்கலுற்றேனே ! இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும் இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே ! நிலா - 17 .09 .2010  

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...

ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி ! குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல- ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-  உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி ! இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம- விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு, கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-  ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது- எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-  எஞ்சாமி நீயி எப்ப வருவ?........... ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்- வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு. கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு- காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு- வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ- குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ? கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ? ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு, ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி- ஒத்தடம் கொடுத்து- உருக்கமாப் பாத்துக்கிட்டது - எந்தப்பு எஞ்சாமீ !

இரண்டு மாமரங்கள்; Two Mango Trees

A poem about two Mango trees and this is a picture of my native hometown 'karutha kolumban' Mango tree in Jaffna மாம்பழம் , சாப்பிடுவதற்கென்று ஒரு மரம் வளர்த்தேன். ஒரு மரம் என்றா சொன்னேன்? ஒரு மரமல்ல, ஒன்றுக்குத் 'துணையாய் நிற்கட்டுமே' என்று இன்னொரு கன்றையும் வளர்த்தேன். ஒரு 'கறுத்தக் கொழும்பான்'. மற்றையது, நல்ல நெடுமி- அது 'பிளாட்'!  மரம் காய்க்கத் தொடக்கி, ரெண்டு நாள் இல்லை- வண்டடிச்கிப் போட்டுது. 'கறுத்தக் கொழும்பான்' முழுக்க  மாம்பழ வண்டு. "பிளாட்" ஒரு புனிதனைப் போல  ஓங்கி ஓங்கி வளர்ந்து கொண்டே  இருந்தது- இன்னும் காய்க்கவே இல்லை. இப்போது, வண்டடிச்சாலும் பரவாயில்லை அது தான் ருசி எண்டு பக்கத்து வீட்டுச் சிறுசுகள் மரம் முழுக்க ஏறி, கொம்மாளம் போட்டுக் கொண்டு  பழம் பறிக்கத் தொடங்கினர். காய்ச்ச மரம் எண்டதால அது கல்லெறியும் பட்டது. பிறகு, 'பிளாட்' மரத்தைப் பார்த்து, சனம், இது மலட்டு மரம் எண்டு கதைக்கத் தொடங்கீட்டுது. காய்க்கும் காய்க்

ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே........

இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு  விளக்கம் இப்போதைக்குக்  காணும் என்ன ? ;)   பிரஜாப சங்கல்பத் தீயினின்றும்  எழுந்து வருகிறது-எனக்கான கீதம். ஆழமான லோகத்தின் ஜென்ம அதரங்களிலிருந்து சாபத்தின் சன்னல் வழியே எழுகிறது-அது, மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை, ஆலகால விடத்தினின்றும் அருட்சிக்கப்பட்டு நிருதூழியமான-எனது நனவிலி மனதுடன் உரையாடல் வைக்கிறது. தேவதேவனின் குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற காலச்சக்கரம்  எந்திரம் போல சுழழுகிறது- இது  ஏந்திழை சம்பந்தமானது. சதசித்து சம்மந்தமாக –ஒரு சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய், அது  நித்திய கைங்கூலியத்திலிருந்து ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.- அதற்குள்,  நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது- உன் இசை சம்பந்தமாக....... சவரிக்கப்படாத என் அந்தங்களில் மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது! அதீதத்தின் அதீதமே, தேவ தேவா – உன் இரட்சிப்பு  எத்துனை ஆகாம்மியமானது? ரஸமானது? இன்னல் தரும் உன் இசை, ஸ்மரணம், மரணம், கடந்து லஜ்ஜையின்றிய க்