Skip to main content

Posts

இயல் ஒன்று தருவே !

                              விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ- பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-  கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ - என்றும் தகல் விளங்கா பெரும்  தருக்கமும் நீ ! கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ துணை வளவா இணை வளவா பிணை வளவா பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ ! பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே  கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின் தன்னும் வேண்டா தனையும் வேண்டா  தானொடு அடங்கலுற்றேனே ! இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும் இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே ! நிலா - 17 .09 .2010  

எஞ்சாமி நீயி எப்ப வருவ?...

ஒண்ணுமே சொல்லாம போன எஞ்சாமி ! குத்தமொன்னு சொல்ல- குமுறியழ நீங்க இல்ல- ஒன்னுக்கு ஒண்ணா உசிரா வளத்துப்புட்டேன்-  உக்காந்து தேத்திவிட -நீங்க இல்ல எஞ்சாமி ! இவ கிடக்கா சிறுக்கியின்னு இம்புட்டும் இரங்காம- விறைப்பா நீரு, வில்லங்கமாப் போனீரு, கண்ணுக்குள்ள நீரு வரப்பத் தாண்டுது-  ஆத்தில தண்ணி அடிச்சிகிட்டு ஓடுது- எருக்கம் வித கையிருக்கு- அரளி வித அரைச்சிருக்கு-  எஞ்சாமி நீயி எப்ப வருவ?........... ஒத்தையில நட்டு வெச்ச மரம் போல வாடி நிக்கேன்- வாடிய பயிருக்கு வாழ கொஞ்சம் பச்சை கொடு. கத்தியில கட்டி வெச்ச  காய் போல காஞ்சிருக்கு- காயெல்லாம் தேஞ்சு என் வாய் போல பொளந்திருக்கு- வேணாஞ்சாமி நான் உன்னைக் குறை சொல்ல எல்லாத் தப்பும் எம்மெல்ல எஞ்சாமீ- குடை பிடிச்சு இங்காரும்  நெய் விளக்கு  ஏத்துவாரோ? கோடியில யாரும் கொடி வெச்சு தூத்துவாரோ ? ஐப்பசியில் மழை பேஞ்சு ஆவணியில் காத்தடிச்சா சித்திரையில், செங்கரும்பு சீனிபோல தித்திக்கும்முன்னு, ஒத்தையில போன எறும்புகளைப் புடிச்சி வெச்சி- ஒத்தடம் கொடுத்து- உருக்கமாப் பாத்துக்கிட்டது - எந்தப்பு எஞ்சாமீ !

இரண்டு மாமரங்கள்; Two Mango Trees

A poem about two Mango trees and this is a picture of my native hometown 'karutha kolumban' Mango tree in Jaffna மாம்பழம் , சாப்பிடுவதற்கென்று ஒரு மரம் வளர்த்தேன். ஒரு மரம் என்றா சொன்னேன்? ஒரு மரமல்ல, ஒன்றுக்குத் 'துணையாய் நிற்கட்டுமே' என்று இன்னொரு கன்றையும் வளர்த்தேன். ஒரு 'கறுத்தக் கொழும்பான்'. மற்றையது, நல்ல நெடுமி- அது 'பிளாட்'!  மரம் காய்க்கத் தொடக்கி, ரெண்டு நாள் இல்லை- வண்டடிச்கிப் போட்டுது. 'கறுத்தக் கொழும்பான்' முழுக்க  மாம்பழ வண்டு. "பிளாட்" ஒரு புனிதனைப் போல  ஓங்கி ஓங்கி வளர்ந்து கொண்டே  இருந்தது- இன்னும் காய்க்கவே இல்லை. இப்போது, வண்டடிச்சாலும் பரவாயில்லை அது தான் ருசி எண்டு பக்கத்து வீட்டுச் சிறுசுகள் மரம் முழுக்க ஏறி, கொம்மாளம் போட்டுக் கொண்டு  பழம் பறிக்கத் தொடங்கினர். காய்ச்ச மரம் எண்டதால அது கல்லெறியும் பட்டது. பிறகு, 'பிளாட்' மரத்தைப் பார்த்து, சனம், இது மலட்டு மரம் எண்டு கதைக்கத் தொடங்கீட்டுது. காய்க்கும் காய்க்

ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே........

இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு  விளக்கம் இப்போதைக்குக்  காணும் என்ன ? ;)   பிரஜாப சங்கல்பத் தீயினின்றும்  எழுந்து வருகிறது-எனக்கான கீதம். ஆழமான லோகத்தின் ஜென்ம அதரங்களிலிருந்து சாபத்தின் சன்னல் வழியே எழுகிறது-அது, மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை, ஆலகால விடத்தினின்றும் அருட்சிக்கப்பட்டு நிருதூழியமான-எனது நனவிலி மனதுடன் உரையாடல் வைக்கிறது. தேவதேவனின் குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற காலச்சக்கரம்  எந்திரம் போல சுழழுகிறது- இது  ஏந்திழை சம்பந்தமானது. சதசித்து சம்மந்தமாக –ஒரு சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய், அது  நித்திய கைங்கூலியத்திலிருந்து ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.- அதற்குள்,  நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது- உன் இசை சம்பந்தமாக....... சவரிக்கப்படாத என் அந்தங்களில் மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது! அதீதத்தின் அதீதமே, தேவ தேவா – உன் இரட்சிப்பு  எத்துனை ஆகாம்மியமானது? ரஸமானது? இன்னல் தரும் உன் இசை, ஸ்மரணம், மரணம், கடந்து லஜ்ஜையின்றிய க்

ஒன்றுமே நடக்காதது போல -கவிதை-

-நிலா-  4-4-2009                                          புற்களில் உட்கார்ந்து எழும்   பூச்சிகள் பறக்க,   மாட்டுச்  சாணமோ என்னமோ ஒன்று ,   காலில் மிதி படாமல் ,   லாவகமாகத் தப்பி- தெருக் கரையில் புரண்டோடும் - சிறு வாய்க்காலுக்குள் விழுந்து விடாமல் - சீமெந்துத் தரை பிடித்து ஒண்டிக்கொண்டே - ஆர் மேலும் உரசிக் கொள்ளாமல் நடந்து, எல்லாத்துக்கும் ஒரே புன்னகை தான்-   நிரம்பக் கதைக்க வேண்டும் போல் இருந்தாலும், ஒற்றை வார்த்தை தான். பெரும்பாலும் இருட்டுத் தான் - ஏதாவது   பொதுக் கூட்டத்தின் முடிவிலாய் இருக்கும் - எங்கள் புறப்படும் பயணம்.   நாலடி தள்ளி அல்லது விலகி   சேர்ந்தாட் போல அல்லது முன்னுக்கும் பின்னுக்குமாய் - சீ சீ ...., பொதுவாய்ச் செர்ந்தால்ப் போலத் தான்.. நடக்க நடக்க இன்னும் வீடு, தூரம் போய்ச் சேர வேண்டும் போல் - ஒன்றுமே இல்லை -எல்லாத்துக்கும்   ஒரு லேசான தலையாட்டல் - பிறகு   ஒரு சிரிப்பு- பல்லுக்கும் வாய்க்கும் இடைவெளியே தெரியாமல்- உள்ளுக்குள் இறுகிச் சிரிக்கின்ற சிரிப்பு - கள்ளத்தின் குறும்புச் சிரிப்பு !   அத