Skip to main content

Posts

ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே........

இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு  விளக்கம் இப்போதைக்குக்  காணும் என்ன ? ;)   பிரஜாப சங்கல்பத் தீயினின்றும்  எழுந்து வருகிறது-எனக்கான கீதம். ஆழமான லோகத்தின் ஜென்ம அதரங்களிலிருந்து சாபத்தின் சன்னல் வழியே எழுகிறது-அது, மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை, ஆலகால விடத்தினின்றும் அருட்சிக்கப்பட்டு நிருதூழியமான-எனது நனவிலி மனதுடன் உரையாடல் வைக்கிறது. தேவதேவனின் குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற காலச்சக்கரம்  எந்திரம் போல சுழழுகிறது- இது  ஏந்திழை சம்பந்தமானது. சதசித்து சம்மந்தமாக –ஒரு சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய், அது  நித்திய கைங்கூலியத்திலிருந்து ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.- அதற்குள்,  நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது- உன் இசை சம்பந்தமாக....... சவரிக்கப்படாத என் அந்தங்களில் மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது! அதீதத்தின் அதீதமே, தேவ தேவா – உன் இரட்சிப்பு  எத்துனை ஆகாம்மியமானது? ரஸமானது? இன்னல் தரும் உன் இசை, ஸ்மரணம், மரணம், கடந்து லஜ்ஜையின்றிய க்

ஒன்றுமே நடக்காதது போல -கவிதை-

-நிலா-  4-4-2009                                          புற்களில் உட்கார்ந்து எழும்   பூச்சிகள் பறக்க,   மாட்டுச்  சாணமோ என்னமோ ஒன்று ,   காலில் மிதி படாமல் ,   லாவகமாகத் தப்பி- தெருக் கரையில் புரண்டோடும் - சிறு வாய்க்காலுக்குள் விழுந்து விடாமல் - சீமெந்துத் தரை பிடித்து ஒண்டிக்கொண்டே - ஆர் மேலும் உரசிக் கொள்ளாமல் நடந்து, எல்லாத்துக்கும் ஒரே புன்னகை தான்-   நிரம்பக் கதைக்க வேண்டும் போல் இருந்தாலும், ஒற்றை வார்த்தை தான். பெரும்பாலும் இருட்டுத் தான் - ஏதாவது   பொதுக் கூட்டத்தின் முடிவிலாய் இருக்கும் - எங்கள் புறப்படும் பயணம்.   நாலடி தள்ளி அல்லது விலகி   சேர்ந்தாட் போல அல்லது முன்னுக்கும் பின்னுக்குமாய் - சீ சீ ...., பொதுவாய்ச் செர்ந்தால்ப் போலத் தான்.. நடக்க நடக்க இன்னும் வீடு, தூரம் போய்ச் சேர வேண்டும் போல் - ஒன்றுமே இல்லை -எல்லாத்துக்கும்   ஒரு லேசான தலையாட்டல் - பிறகு   ஒரு சிரிப்பு- பல்லுக்கும் வாய்க்கும் இடைவெளியே தெரியாமல்- உள்ளுக்குள் இறுகிச் சிரிக்கின்ற சிரிப்பு - கள்ளத்தின் குறும்புச் சிரிப்பு !   அத

பௌர்ணமிக் கிறுக்கு -02 -கவிதை-

-நிலா- 29-7-2010  ஒரு நாள் , வானம் விடை பெற்றுக் கொண்டிருந்தது- அந்த நாள் புத்தனும் சில சந்நியாசிகளும்   வானத்துக்குக் கீழே நடப்பவை பற்றி   பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள். மரங்கள் நேர் கோட்டில் அசைகின்றன  என்றான் ஒரு- புனிதன் . இலைகள் வளைவை நோக்கிப் பயணிக்கின்றன  என்றான் இன்னொரு- புனிதன் எனினும் எல்லாமுமே மண்ணை நோக்கித்தான் விழுகின்றன என்றான்   இன்னொரு- மனிதன். புத்தனுக்கு கதைப்பதற்கு ஏதுமில்லை- கதைகளைத் தவிர்க்கிறான். அல்லது கேள்விகளைத் துரத்துகிறான்.   கேள்விகளில் இருந்து பதில்களுக்கான நியாயங்களை அவன்   நிராகரிக்கிறான் அல்லது நிராகரிப்புக்களை கேள்விகளாக்குகின்றான். ஏனென்றால் அவன் எப்போதும்  புத்தனாயிருக்க விரும்புகிறான். புத்தன் ஒரு தர்மத்தை ஸ்தாபித்தவன், அவனுக்கு   வழக்கொழிந்து போன காருண்யம் பற்றித் தெரியவே தெரியாது. இருந்தாலும் அவன்   மரங்கள் நேர் கோட்டிலா, இலைகள் வளைவிலா, கனிகள் சுவையிலா பயணிக்கின்றன என்பது பற்றி   கனவுகளில் தனும் சிந்திப்பான்.   புத்தன் ஒவ்வொரு தடவையும்  கனவில் விழும்

காக்கைகளும் நரிகளும் வடையும்...

நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்துவிட்