Skip to main content

Posts

காக்கைகளும் நரிகளும் வடையும்...

நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்துவிட்

பெரும் பரனோடு பாவி -கவிதை

      மூழ்கிச் சா என் கடவுளே உன் உத்தமத்தின் அறுதியில் அறுதி காண் அம்பலனே ஐம்பெரும் அவத்தையிலே   அறு படுந் தீயில் அயில் பெரும் பரனே பரமொடு பாங்கர் படுத்துறங்கு முன் பாவைப் பழி ஏகில் ஆண்டும் நீ தீ தீண்டாமல் திகம்பரனாய் என்னை திசையணி   பற்றுக்கு மேலாய்ப் பரமன் ஒழிந்திடும்    அற்ற குடிலுக்கு ஊற்றாய் வழிந்திடும் என்னன்னை நீ எற்ற உன்திருக்கால் ஒற்றி    அற்றுப்போகவென இற்றுப் போய் எனதுள்ளம் ! எற்றைக்கும் ஏற்கும் எனப் பணியேனே இச்சை ஆல். ஆல் இச்சை ஆவதுமிச்சை கொச்சை மொழியிலுன் கொற்றம் பிடுங்கி ஓர் பிச்சைப் பாத்திரமேந்தியதன் அட்சய விளிம்பிடுக்கில் அடுத்தடுத்து ஊற்று உன்ரவை ஊற்றிய உறவுதனை ஒருக்களித்துன்ப துன்ப மில்லாப் பொருதி நீ அளி ! அளித்தோய்க்கும் அளி அமுதம் அள்ளி அளி தோய்த்து ஆற அள்ளி கிளி தூக்கும் கிளர்ந்தோங்கும் கிளி முனிவ கிழவா விழவா உன் விழி போலுந் தெளி அசையும் நதிச் சரிவில்-   இலை போல் இல்லா பூப் போல் இல்லா இயல்பிலும் இல்லா கலை போல் இல்லா கருத்திலும் இல்லா கருணையும் இல்லா வசை போல் இல்லா வாசியும் இல்லா முது கொன்றளுமி

பௌர்ணமிக் கிறுக்கு -01

இதோ இந்த புத்தன்   போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி வெளிச்சக் கூடுகள் மின்னி   ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி தாமரைக் கடவுளனுக்கு நீலோத்பலம் பிடுங்கி, சம்பங்கியும், பவள மல்லிகையும் சூட்டி, கண்களை மூடி மோனத்தின் உச்சியிலிருக்கும் புத்தன்- அதோ அன்று தான் பிறந்தான். ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து, காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன். அதோ அன்று தான் பிறந்தான்..! அவனது ,கேசங்களும் தந்தங்களும், அகவன்கூடும் தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே- முக்தியாகிப் போனான். புத்தா, சந்திக்குச் சந்தி, அரசமரத்துக்கு மரம் கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது- கடினமடா பார்க்க எனக்கு- அவருக்குத் தான் தூக்க முடியாத தொந்தி   நடுத்தெருவிலே குந்தி விட்டார். நீ கட்டழகனல்லவா ? கூடாது கடவுளே - நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே ! காசினியிலோ   கங்கையிலோ   குளித்து விட்டு "கப் " என்று இருந்திருக்கலாம். பாவி ... கடவுளாகிப் போனாயே ..!

ஆளச் சொல்லுகிற ஆட்சிப் பாட்டு

                              அரவச் சடை கழழில் பூட்டி அருவத் துயில் விழியில் கொண்டு அருக்கக் கதிர் அகலம் பரப்பி ஐம்பொன் உன்னை ஆழேன் அருகில்?  இரக்கக் குணம் சிறிதும் இல்லா இன்பப் பொருள் எதிலும் அல்லா மெய்யன் உன்னை மெச்சேன் பொழுதில்? பொய்யன் உன்னை புகழேன் வாதில்? [எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்] வானமே இரு சோலை வான்முகிலும் நாடும் கானமே  ஒரு பாட்டில் கவியரசு செய்யும் ஏனம் ஒரு கிண்ணம் பாலமுது  கொய்து பானமெனப் பருக்கும் சேய் எனது கன்றே ! கண்ட திருக்கோலம் காட்சிப் பிழையின்றி கைகளை தலை மீது தானுயர்த்தி தவிசு பாடி பொய்களை பூசுற போதுமென  அகஞ்சொல்லி அல்லிக் குவளையிவள் ஆதாரமின்றிப் படர்ந்து !  [ஆசிரியத்துறை] வேள்வித் தீயில் வெட்கிக் குனிகையில் ஆவி பெருகி  அங்குமிங்கும் ஒழுகி -ஐயம் இல்லாமல் ஐம்புலனும் கருகி அட்டமா சித்திக்கு அப்பாலும் தாவித் தாவி, தன் நிலைபரம் தவித்து- கடினமடா காத்திருத்தல் காம்போடு வேர் பிடுங்கல்! [ஆசிரியத்துறை]  மெய் நிகர்த்தப் பாடுபட்டு மெய்யாலே விதிர் விதித்து கை நிறையப் பாடும் பட்டு பாழுமோர் பழியைச் சுமந்து "

போன வழிப் பயணம்...

பாகம் - 02. பயணப்படுகிற உடலைத்தூக்கிச் சொருகிக் கொண்டே அந்தராத்மா பூமிக்கும் வானத்துக்குமேலேயும் கூத்தாடுகின்றது. பேரூந்து ஒவ்வொரு முட் பதிவாளர்களையும் நின்று நின்று ஏற்றிக்கொண்டு செல்கிறது, அது தன் பாடு ; நான் என் பாடு ; ஊர்ந்துக்குள்ளே பலர் கூப்பாடு ! என் மௌன தவத்தைக் கலைக்கிறதுக்கேண்டே கண்டெக்டர் ஒரு பலத்த சப்தத்தில் இப்ப வந்திருக்குற பன்னாடைப் பாடல்களையெல்லாம் போடத்தொடன்கீட்டான். முதல் புலி உறுமுது, பிறகு, பொம்மாயி..., ச்சே..என் தவத்தைக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், அம்மாவின் அருமந்த வழிஞ்சு விழுகிற நித்திரையும் போச்சு..! சொப்பனம் கலைஞ்சு எழும்புற சின்னக் குழந்தையைப் போல அம்மா சுழன்று வருகிற கொட்டாவியை கையால் பொத்திக் கொண்டே எழும்பி திரும்பவும் நித்திரையாப் போட்டா... ! இடையில வீட்டையிருந்து ஒரு குசல விசாரிப்பு SMS, நான் குறுஞ்செய்தியைப் படிச்சிட்டு ஒரு மார்க்கமாச் சிரிக்கேக்க எனக்கு முன்னால இருந்த ஒரு "அரைவேக்காடு" என்னைப் பார்த்துச் சிரித்தது, அது சிரிக்குதா பழிச்சுக் காட்டுதா என்று தெரியாததால எனக்கு பலமாச் சிரிப்பு வந்துட்டுது, அது தன்னைப் பாத்துத்தான் நான்