Skip to main content

Posts

என் நாளினது சுமை

ம னிதனின் நிலைப்பாடு என்பது எந்தப் புள்ளியில் தங்கியிருக்கிறது என்பதற்கான கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன். சாதாரணமாக ஆசனத்தில் அமர்ந்து இருப்பீர்கள். அது அவ்வளவு சௌகரியப்படாத போது , காலைக் கொஞ்சம் மடக்கி, பிறகு காலுக்கு மேல் கால் போட்டு இன்னும் பிறகு புழு நெளிவதை போல கால்களைப் பின்னிக் கொண்டும், கொஞ்ச நேரமப்பால், கால்களை நிதானமாக பிரித்துப் போட்டும ஆயாசமான நிலையில் ....... இருக்க எத்தனிப்பீர்கள். இந்த உட்காருதலுக்கான கூர்ப்பே இவ்வளவு நீளுகையில், மனிதனின் நிலைப்பிற்கான கூர்ப்பானது எத்துனை நீண்டதாய் இருக்கும்.?உங்களைக் கடந்து செல்கின்ற நாட்களை ஒவ்வொருவரும் எவ்வாறு  கழிக்கிறீர்கள் ? புதிதாக புலருகின்ற நிதானமேயல்லாத காலைப் பொழுதில் மனமும் உடலும் வெறுப்பைச் சுமந்து கொண்டு உடலைக் காற்றில் மிதக்க வைக்கின்றது. நித்திரையின் இறுதிப்படி இன்னமும் கண்களில் பேராசையைத் தூண்டி , நாளின் அபவாதங்களை ஆராய்கின்றது. இந்த நாளின் தொடக்கம் ஒரு வேளை ஏதாவது ஆராய்ச்சியுடன் ஆரம்பமாகலாம். என்ன, எதுவென்ற கேள்விகளுடன் மணிகளை, விழுங்கி ஏப்பம் விடுகின்ற அவசரத்தில் காலம் நகருகின்றது.    கண்ணாடிக் கூட

பெய்கின்ற மழைக்கு,

உணர்வுகளைத் திசை திருப்பி அங்குமிங்குமாக அழைக்கழிக்கின்றது சுவாலையின் சுடர் நாக்குகள்.- இரவினது மிக மிருதுத்தன்மை- நித்திரையின் நிலைப்படிகளின் இருபுறமும் மெழுகுவர்த்திகளை அந்தம் பிடிக்கின்றது. காதல் போன்ற கனமற்ற ஒரு வார்த்தை நம் இருவரின் காதுகளிலும் குளிர்க் காற்றுடன் மோதுகிறது . தந்தத்தில் செய்யப்பட்ட புத்தனின் மோன நிலை வறட்சியான மேகத்திலிருந்து அடர் மழை பெய்கிறதைப் போல கனத்தது . மொழிகளைப் பரிமாறாத சிலைகளிலிருந்து நமக்கான கேள்விகளையும் ,பதில்களையும் பெற்றுக்கொண்டோம். வெற்றுககாகிதத்திட்கும்-பாலியக் குழந்தைக்கும், வர்ணங்களுக்கும்- உள்ள பிரேமையைப் போல மொழிகளுக்கப்பாடப்பட்ட - பழஞ்சோற்று வார்த்ததயாடினோம். கடுங்குளிரால் போர்வைகளில் ஒளிந்திருந்த சன்னஙகள் கண்மூடிக் கொண்டன. வெளியே நல்லமழைக் காத்து. கூதிர்கால பின் இரவின் முனங்கத் சத்தம். தவளைகளின் ஒசைக்குறிப்புகள்..... தகரத்தின் பொத்தலுக்குள் மழை நுழைந்த ஜாலச் சந்தம்......... நிலவிருட்டின் அதி உன்னதம்... எல்லாவற்றுக்குள்ளும், அறைக்குள் அல்லோல கல்லோலம்

முகம்

சகுந்தலாவுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.ஆனால் இன்று வரைக்கும் யாருமே அவளை வந்து பார்த்துவிடவில்லை.சகுந்தலாவுக்கு இருபது நெருங்கிக் கொண்டிருந்தது .பள்ளிக் கூடப் படிப்பு ஐந்தாறு தேறும் .  பெரிய அழகியும் இல்லை . அழகிக்கு முதட்படியும் இல்லை   கருப் பீ.. ..  கொஞ்சம் குட்டை . உடம்பு மசமசவென்று துவண்டு கிடந்தது .பெரிய விஷய ஞானமெல்லாம் கிடையாது . கூந்தல் நீளமாகக் கிடக்கும் அதுவுஞ்சுருட்டை .தனக்குள் தான் பெரிய  அழகி என்ற  கர்வமெல்லாம் அவளுக்கில்லை . அவளுக்கு தன உருவமே மறந்தது போலத்தான் படும் .அவ்வப்போது தன முக வடிவம் மறந்து  போய் கண்டவர்கள் ,பார்த்தவர்கள் முகமெல்லாம் தன்னது தானென்று நினைத்துக் கொண்டாள்  .அதனால் அவளுக்கு தன அழகைப் பற்றி ஓரளவுக்கு பெருமிதமாகவும் இருந்ததுண்டு .அவள் சேலை தான் கட்டிக் கொண்டாள் .  சில தடவை பாவாடையும் ,பிளவுசும் அணிந்தாள் .தன்னை சிங்காரிப்பதில்  எப்போதும்  ஆர்வமிருந்ததில்லை . தான் சிங்காரித்த முகத்துடனேயே எப்போதும் இருப்பதாகவும் பட்டது அவளுக்கு .......!     அவள் தகப்பனாருக்கு வேலை இருந்தது. தரகர் வேலை. வீடு பிடித்துக் கொடுத்து, அதிலே கி

பவனி .............

                                                        எனக்கு முன் , நீலத்தின் நிறத்துக்கு சொந்தமானவர்கள் வாழ்ந்திருந்தார்கள் - எங்கள் காணியில் . நாயின் கடை வாய்ப் பல்லின் மாமிச நாற்றத்தைப் போல நாளாக ஆக அவர்களின் வாசம் நீங்கிக்கொண்டிருந்தது . இருந்தும், மாவடுக்கள் தங்கிய மரம் காய்க்கத் தொடங்கிய பின்னும் கூட வாசம் நீங்கிய தடம் போகவில்லை............ எனக்கிருந்த அமில வார்ப்பை கவிழ்த்துக் கொட்டி துணியினால் தேய்த்துக் கழுவியும் - போகவில்லை நீலத்த்தின் நிணம் .......... செய்வதொன்றும் அறியாமல் அக்கினிக் கடவுளைத் தொழ , தனவந்தம் செய்தான் அவன். பிறகு - நானும் , நீலந்தாங்கியவர்களும் பச்சைக் கூண்டோடு திரிபுரம் எரித்த சிவன் மாலோடு , பவனி வந்து கொண்டிருந்தோம் - பால் வீதியில்.! -நிலா

புத்தம்.

புத்தனை, போதையில் சந்தித்தேன். இன்று அவனிடம் எதுவுமில்லை ஒரு ,காவியையும் , சதக் காகாசுகளையும் தவிர..... காலத்தின் அழுகிய நாற்றத்தால் போதியில் சந்திக்க வேண்டிய அவனை .............................. .......................................................... பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும் வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய் அவன் பதில்கள் இருக்கவில்லை. 'வாசவதத்தை' பற்றியும், தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது.... அவன் பதில் ..... புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும் அவனின் பௌர்ணமி ,.... பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....! அவனுக்கும் தெளிவில்லை , எனக்கும், தெளிவில்லை..... காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்........... அரச மரத்து அணில் சொன்னது........ இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்..... வேலையத்த பயல்..... மௌனத்தின் காற்று வெளி - படபடத்தது.... அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி - மீண்டு வந்தேன். அவன் சீடன் சொன்னான், நானும் புத்தனாகி விட்ட

அவைப் பழி

மண்ணில் வாழ்மின்னு அலகில்சீர் வன்னிலங்கை பொன்போல் மன்னும் மனு நீதி கண்ணும் திரை சேரும் கலையது திருந்தோதி முறையது வாழ்ந்த பலர். முன்னுமில்லையது கேளா செங்கதிரோன் வெடித்தான் பகட் போது வடவைதான் முகம் புலர்ந்து குவலயம் பண்ணி-சோலையிட் சிறப்புற. கண்ணும் கட் பட்டு,பாதகம் பழந்தமிழ் மறைமொழியும் சிதறி-கனியற்றரறு போல மலர்மகள் பொங்கு கங்கு ஊடு போகி தொலைந்தனள் உயிர் பதைக்க. வெங்குமில்லையது போல் பழி பாவம் பொருளில்லார் போருள்கொண்டார் பொருளற்று போதுமின் முன் பொருளோ பொருளாகி உயிர் போதும் நிலையறவாய். அவைகுலைந்து சபை சரிந்து மறுமை நீதியோழிந்து கடைவாசல் மாய்தலெனும் பேருண்மை கொண்டு நட்கனவு கண்டாரை நமன் கொண்டனனே. துயர் மிகு மாந்தர் துடிப்பதுவுமிறை பொறுக்க செவியற்றோ கிடந்தவன் கோபுரஞ்சரிய கல்லெனக்கிடந்தவன் மணிமுடிதரித்தவன் மண்ணேயானான். பின் முன் வந்தவன் கேடு புரிந்தான் ஈகாடு ஆகாடு சாகாடு பூகாடு ஒன்றே போகாது போகாது பாவாது வந்த கொலைன்ஞனின் அறம்பாடி. பக்கமும் துக்கமும் நீருரூக்கொண்டதெந்தாகாரமும் இவ்வளவில் நீளும் நெடு

குறி சொல்லி

      நா ன் படிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வந்தேன் . மேசைக்கு சமீபமாக தலையைக் கவிழ்த்துக் கொண்டே புத்தகத்துக்குள் அமிழ்ந்திருப்பது, புத்தகத்தின் முதற் பாகங்களை மடித்து ஒற்றைக் கையால் லகுவாக தூக்கிப் பிடித்துப் படிப்பது , ஒரேயடியாக , கட்டிலிலே அகல விரித்துப் போட்டு புத்தகங்களை மேய்ந்து பார்ப்பது ,ஒரு நிழல்த் தருவின் கீழே சாய்வு நாற்காலியைத் தேடிப போட்டுக்கொண்டே சலனமின்றிப் படிப்பது.... ஒ.... புத்தகங்களைப படிப்பதென்பது பெரியதொரு காரியம். அதற்கு முதலிலே புத்தகங்களைப் பற்றிய எண்ணக்கரு பரவ விரிந்திருக்க வேண்டும். சல்ஜாப்பமின்றிய தெளிந்த நனவோடை போல புத்தகளின் அறை எண்கள் கிடாசப் பட வேண்டும். புத்தகத்துக்குள்ளே கிடக்கின்ற கூறுகள் நிகண்டுகள் போல நெருங்கி லயிக்க வேண்டும் .பதியையும் பசுவையும் போலத்தான், ஜீவாத்மா பரமாத்மாவோடே உளறிக்கொண்டு கிடக்க வேண்டும். இது சோதினைப் புத்தகமாக இருந்தாலும் சரி........... புத்தகங்களைப் படிக்கிற தருவாயில் நான் சமனிலியாகவும் , மாறிலியாகவும், சமதானியாகவும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருமுண்மை பலத்தது.  இது வெறும் பலித்த சமண்பாடேயண்றி முழுவதும் அல்லவெண்

அதி பனுவல்| Hyper Text

                                                             ஒரு நிமிஷம் ............ "உறுபசி" இயல்புக்கும், வெளித்தத்துவத்தி ற் கும்   இடைப்பட்ட ஓர் வெளி நிலையில் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.  ''உறுபசி'' எண்டால், அதீத பசி எண்டு  அர்த்தம்.  Deep Hunger | Irremovable difference between presence and absence!  இப்பிடித் தான் ஏதாவது எழுதப்போறன். இதை விசும்பின் எல்லைக்குள்ளும் அப்பாலும் வைத்திருக்கும் பொறுப்பை உங்களிடம் கையளிக்கின்றேன். கோட்பாடுகளும், சுதாகரிப்புக்களும் நிறைந்த இந்த நிலை வாதத்தில், நானும் தேடலுடன் புறப்பட்டிருக்கிறேன்(உளட்டித்  தள்ள :P) பள்ளிக்கூடம் முடிச்ச கையோட  வேலைவெட்டி இல்லாமல எதையாவது ஆவணப் படுத்த விரும்புகிறேன்.இனி ,பொருத்தலும் இலமே , அன்புடன், நிலா  27 /09 /2009