முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 12, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலமாற்றம்

1981இல் வெள்ளவத்தை என்று நிறைய நண்பர்கள் பழைய புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்கள். கூர்ந்து பார்க்கும் போது அப்பத்தைய பெண்கள் எல்லாரும் நல்ல வடிவான உடுப்புப் போட்டு, நல்ல ட்றேசிங் சென்ஸ்சோட இருந்திருக்கிறதா தெரியுது. அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு. வெள்ளவத்தை, அப்போதும் இப்போதும் தமிழர் நகரம் தான். இலங்கையின் அறுபதாமாண்டு காலப் படமொன்றை முன்னர் ஒரு தடவை பார்த்து வியந்தேன். சாதாரணமாக சந்தையில் பண்டம் வாங்கும் பெண்களின் படங்கள் அவை. படங்களில் பாடல்க்காட்சியின் பின்னணியில் வரும் 'ரிச் கேர்ள்ஸ்' மாதிரி இருந்தார்கள். எனது அம்மா பழையவர். அறுபத்தைந்து பிராயம். சிறிய சட்டைகளையும், காற்சராய்களையும் மட்டுமே இளம்பருவத்தில் யாழ்ப்பாணத்தில் அணிந்ததாகச் சொன்னார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரயில் முழங்காலுக்கு கீழே சட்டை போட்டால் தண்டனை என்றும் சொன்னார். கணருபனின் அம்மா அதே காலத்தவர். அறுபது பிராயம். தான் என்னென்ன வகையான கால்ச்சப்பாத்துக்களை அணிந்ததாகவும் இப்போது அப்படி ஒன்றுமேயில்லை என்று கேலியாக, "நான் ஸ்டைல் என்று சொல்லி அணிந்திருந்த" எனது செருப்புக்களை பார்த்

ஓ...அந்த இனிமையான நாட்கள் என்று சொல்லும் காலம்...

முதலில் இருந்து தொடங்க விருப்பமா? தொடங்குதலில் இருக்கும் இன்பம் முடிதலில் இருப்பதில்லையல்லவா? அதனால்க்கேட்டேன். முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா? முதலிலிருந்து தொடங்கிய யாரையும் யாரும் கவரவேண்டுமென்றில்லாத, நாமாக நாமிருந்த அந்த நாட்களை மீட்டு மீட்டு மீட்டு.... அதனுடன் கரைவது பற்றி என்ன நினைக்கிறாய்? காதலிலும், கருத்துமோதலிலும் யாரும் யாருடனும் தோற்றுப் போவதில்லை என்று, சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கத் தொடங்கிய 'அந்த முதலில்' இருந்து தொடங்குதல் பிடித்தமா? முற்றுப்புள்ளிக் குற்றுத் தேயாத தட்டச்சுப் பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டே சிரிப்பின் முகங்கள் போட்டு நம்மை நாம் ஆதிக்கப்படுத்திய அந்த முதலில் இருந்து தொடங்க விருப்பமா? எங்கள் கதைகளின் கதைசொல்லல் அழகிற்கும், நம்மைப் பற்றிக் கதைத்தல் தவிர்க்கவும் மென்று துப்பிய அரசியல், பெண்ணிய ,சமுக விழுமிய... அந்த மேவும் வாசனையை மீண்டும் பெற முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா? காதலைத் தவிர வேறு பேசுவதற்காய் விஞ்ஞானிகளாய் மாறிப்போய் கணிதமும் கணினியுமாய் ஆன ஒரு காலம். வெறுமனே முகத்தை முகத்தை பார்த்துகொண்டு பருக்கள்