முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண் வளர்க்கும் ஆண்

பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். "உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்கள்" என்று. உண்மை, இதன் அடிப்படை என்ன என்று பார்ப்போம். அப்பா மட்டும் வளர்க்கிற குழந்தைகளையும் உளவியல் எதோ கூறுதே. இரு பெற்றோரும் இருக்கிற குழந்தைகள் திசை மாறிப் போகிறதில்லையா?அப்படியும் இருக்கிறது. ஆனால், உண்மையில் அறிவியல் என்ன கூறுகிறதென்றால் குழந்தையை வளர்ப்பதற்கு பெண் மட்டுமே போதும். ஏனைய விலங்குகளைப் போல பெண் விலங்கு தான் குழந்தையை பேணிக் குறித்த நிலைக்கு கொண்டுவரும். பெண் பிறவி வேட்டுவச்சி. தன்னுடைய எல்லா நிலையையும் போராடி வெற்றிபெறக் கூடியவள். ஆண் அடிமைத்தனம், குடும்ப அமைப்பு, சொத்து வந்ததன் பின்னர் தான் தகப்பன் குழந்தையொன்றுக்கு முக்கியமாகிறான். இன்று உளவியலில் ஆணினுடைய மரபணு கடத்தப்பட வேண்டுமாகில், தொடர்ந்தும் அந்த ஆணுடன் தொடர்பிலிருந்து, அவனுடனான ஒத்த இயல்பை இருவரும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது. ஆனால் பெண் தன்னுடைய மகனை தனக்குச் சாதகமானவனாகவே வளர்க்கிறாள். இந்த உலகம் ஆண்கள் பெண்க