முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 10, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‎சொற்சிலம்பம்‬

நேற்று ஒரு பெரிய கோலாகலம் கொழும்பில நடந்தேறியது.தெரிஞ்சாக்கள் எல்லாரையும் ஒரே அவையில பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் நிறைய நாளுக்குப் பிறகு. அப்பிடியே அவை முழுக்க நிறைஞ்சதைக் கண்டதும் கனகாலத்துக்குப் பிறகு...இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் நடார்த்திய சொற்சிலம்பம் நிகழ்ச்சி. ஆரம்பத்தில இருந்தே பார்க்க ஆசைப்பட்டும், முதலாவது விவாதம் முடியத்தக்கன தான் வந்து சேரமுடிஞ்சது ஆனாக் கடைசி வரைக்கும் இருந்து பார்த்திட்டுப் போன ஆக்களில நானும் ஒராள். தென்னிந்திய திரைப்படக் குழுக்களின் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும், பாடல் நிகழ்வுகளுக்கும் கூடும் அதே அளவிலான, அதை விட அதிக எண்ணிக்கையான மக்கள்க்கூட்டத்தைப் பார்ர்க்கும் போது, மகிழ்ச்சியாகவும், அதன் பின்ணணியின் உழைப்பையும் யோசிக்க வைத்தது. தமிழ்பேசக்கூடிய இளம் சமுகத்தை மையப்படுத்தி, சமுகத்தை கேள்வி எழுப்பக்கூடிய தொணி ஒன்றிற்கு இவ்வளவு பெரிய சமுக அலையொன்றினை சாட்சியாக வைத்ததை மிகுந்து பாராட்டுகிறேன்.  இதனை நாங்கள் ஊக்கப்படுத்தவும், வரவேற்கவும் வேண்டும். ‪#‎இலங்கை_தமிழ்_விவாதிகள்_கழகத்தினருக்கு_வாழ்த்துக்கள்‬.  ‪#‎சொற்சிலம்பம்‬.