சமத்துவத்தின் அடிப்படையில் இயங்குவதற்கும் நடுநிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நடுநிலை என்றொன்று இல்லை. அது போலித்தனமானது. சரிக்கும் பிழைக்கும் நடுவிலோ, கொஞ்சம் சரி, கொஞ்சம் பிழையாயினும் தெரிவின் அடிப்படையில் ஒரு பக்கமோ நிற்பது. இது நேர்மையான முறையில் விருப்புச் சார்ந்து ஒரு பக்கமாக நிற்கிறேன் என்று கூறாதவரை கண்டிக்கத்தக்கது. நடுநிலையாளர்கள் போன்ற பதங்கள் கண்டிக்கத்தக்கன. சமத்துவம் என்பது பக்கச்சார்பற்றது.இன,மத,மொழி, ஆதிக்க,வர்க்க, பால் நிலைகளைக் கடந்தது;இன்னும் மட்டறு க்கும் நிலைகளையும் கடந்தது.தனிப்பட்ட தீர்வோன்றிலோ குழுமம் சார்ந்த தீர்வொன்றிலோ, மக்கள் சார்ந்த தீர்வொன்றிலோ இது தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும், பிழையான ஒரு கருதுகோளிலிருந்து படிப்படியாக சரியான அனுமானத்தை அடைவதற்கான update க்கும், தமக்கென்றிருக்கும் அடிப்படைக் கருதுகோளை தனிப்பட்ட அரசியலுக்காக மாற்றிக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை இங்காணுவதும் அவசியமானது. பொதுவெளியில் இது அவசியம் பேணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பிழையான கருத்தொன்றை ஒரு தரப்பிலிருந்து கண்ட