முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 22, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரைக்கால் அம்மையாரும் குமரன் பெஞ்சாதியும்!

எ ன்ர வீட்டுக்காரர் முருகன் மாதிரி. முருகன் மாதிரி எண்டா நிறைய விஷயம் உங்களுக்கு நினைப்புக்கு வரலாம்.. ஒண்டு அழகா இருப்பாரெண்டு யூகிக்கலாம்,அது சாடையாக் குறைவு.ரண்டு மனுசியா எண்டுங் கேக்கலாம், அந்தளவு விஷய சாமர்த்தியம் ஆளுக்குக் குறைவு, சும்மா சொல்லப்பிடாது ஆள் நல்ல மனுஷன்,ஆனா முருகன் மாதிரி.   சீர்காழி கோவிந்தராஜணும், பித்துக்குளி முருகதாசும் ஒரு காசெட்டில் பாட்டுப்படிச்சிருப்பினம், “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்” எண்டு, ஓம் எங்கண்ட அவரும் அப்பிடித் தான், வீட்ட சிரிச்சா என்ட அலுவலகம் வரைக்கும் எனக்குக் கேக்கும். அண்டய நாள் முழுத்தும் சந்தோஷமா ஜெகஜ்ஜோதியாப் போகும்.   அதே மாதிரி வீட்ட மனஸ்தாபம் எண்டாலும் அலுவலகம் வரைக்கும் அது வந்து குடையும்;குத்தும்; தலை எல்லாம் இடிச்சு அண்டு முழுக்க ஒரு வேலையும் செய்யேலாமப் போகும். இதால நான் செல்லமா அவரை “முருகா” “முருகா” எண்டு கூப்பிடுவன். அவர் “வள்ளி” “வள்ளி” எண்டு கூப்பிட்டு “அடிக்கள்ளி” எண்டு முத்தாய்ப்பு வெச்சு எங்கண்ட ரோசங்கெட்ட சண்டை இனிதே முடியும்.   சொன்னாப்போல, ஆளுக்குப் பேரும் க

அது அல்லது இது...

ஒ ரு காகம் கிழக்கிருந்து மேற்காக கரைந்து கொண்டு வெள்ளை எச்சம் போட்டுவிட்டுப் போன நாளில், வீட்டில் அரிசிபொங்கவில்லை. உலை கொதிக்கவில்லை. அம்மாச்சியும், மாமியும் அழுது வடித்துக் கொண்டிருந்தார்கள். ரங்கன் மாமா சைக்கிளை எடுத்துக் கொண்டு போனவர், போனவர் தான் இன்னுமே வரேல்ல. அப்பா கொழும்பால வீட்ட வந்துட்டார். சிங்கம் மாமாவும், மூர்த்தி அங்கிளும் எல்லாத் திக்குக்கும் போயிட்டினம், ஒரு தகவலும் வரேல்ல.   கண்ணைச் சுழட்டிக் கொண்டு பசியும், தண்ணித் தாகமும் எடுக்குது. நான் வெள்ளப் பிள்ளையா குளிச்சிட்டு, படம் கீறிக் கொண்டிருக்கிறன். என்னை யாருமே கவனிக்கேல்ல. அப்பா கொழும்பால கொண்டுவந்த போட்டெல்லோ அப்பிடியே கிடக்குது. அப்பாண்ட கொழும்பு பாக்கை இன்னும் யாருமே திறக்கேல்ல. அம்மாவும், பூமணிச் சித்தியும் கிணத்துக் கட்டில நிண்டு குசுகுசுத்துக் கொண்டிருக்கினம். பூமணிச் சித்தி அழ வெளிக்கிடுறா. அம்மா அங்க நிண்டு போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறா. அக்காவும் வீட்ட இல்ல. எப்பயுமே அடிச்சு விளையாடுற அண்ணாவும் அண்டைக்குச் சண்டைக்கு வரேல்ல.   நான் அண்ணாவிண்ட கலர்ப்பெட்டியை எடுத்துத் தான் படம் கீறிக் கொண்