முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 28, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனி என் குழந்தைகளுக்கு பெயரில்லை...

                                             இலையுதிர் காலமாதலால் ஒவ்வொரு பௌர்ணிமையிலும் அரச மரங்கள், இலைகளை சட்டை கழற்றுவது போல ஒரு வித சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது ! அல்லது இலையுதிர்காலத்தின் இறுதி மரணந்தழுவும் வெள்ளரசு மரத்தினிலைகள் தெரு நாயொன்று சிரங்கு தாளாமல் உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல உதிர்த்துக் கொட்டுகிறது ! கீழே போதிசத்துவன் இருந்தான் புகழ் மாலையில் நனைவது போல பழம் இலைகளாலும், இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும் அபிஷேகிக்கப்பட்டான். அதில் எதோ உத்தமத்தை உணர்ந்தவன், சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான். பிரம்மச்சரியத்தின் அந்தம் பற்றி புல்லுருவியாக வியாபகமாகிக் கொண்டு வருகின்ற படிகளில் என் முன்னேற்றம் தெரிகிறது !  என் அம்மா எனக்குத் தந்த இறுதி அரவணைப்போடு- 'அம்மா' என்கிற காட்சிப்புலமும் , அதன் விஸ்தீரணமும் என் வட்டத்துள் இருந்து தீர்ந்து போயிற்று. இன்று உணரக் கூடியதாயிருக்கிறது, எனக்கான குழந்தைகளுக்காக சேமித்து  வைத்த அன்பு முத்தங்களைப் பரிமா

மலபரிபாகம் !

                                         விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல'  வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ  மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?'  .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந்திருக்கலாம்,இன்று கடிகார முள்ளைப் பார்த்தாயா, காலத்தின் நிகண்டில் குத்திட்டு நிற்கிறது. ஒருகாலமும் முடியாது,உன்னால் ஒரு காலமும் முடியாது....! ஆக்ரோஷமாய்க் கத்தினார். மலம் என்று சிறப