முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 7, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாசவதத்தை

வாசவதத்தை, பகவானே உங்கள் கோமள ஹிருதயத்தை  திறந்து காட்டியமைக்காக நன்றிகள்.... வாசவதத்தை, என் ஹிருதயத்தில் கோமளத்தின் பரிசுத்தம் இருப்பதைப் போல் அதி உன்னதமான அபிமானமும் உன்மேல் இருக்கின்றது...... சுவாமி, அபிமானம் அசூசைப்படக்கூடியதல்லவே .... வாசவதத்தை உனக்குத் தெளிவில்லை...! பகவான், நான் இப்போது தான் தெளிந்த நதிப்பிரவகம் போலே இருக்கிறேன். எனக்கு எல்லாமுமே ஸ்பஷ்டமாகத் தோதாகத் தெரிகின்றது...., நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்...., போதும் சுவாமி, எனக்குப் புரிகின்றது.தம்சக்பதுவத்தையும், தர்மொபதேசத்தையும் விரைவாகக் கூற ஆரம்பியுங்கள். எனக்கு ஞானம் வேண்டும்! வாசவதத்தை, இப்போதும் காருண்யம் பற்றித்தான் சொல்லப் போகிறேன். என்னை வதைக்காதே ...! -நிலா   

உங்களுக்குப் பிடித்த ஊர் என்ன?

முன்பொரு நாள் அம்மா சொன்னார் இலங்கையில் தனக்குப் பிடித்தமான பெயருடைய ஊர் மருதமுனை என்று. அது அழகான பெயர் என்று வேறு சொன்னார். ஓ பிடித்தமான பெயருடைய ஊர்களும் இருக்கலாம் என்பதை அப்போது தான் யோசித்தேன். இலங்கையில் உள்ள நீங்கள் இரசிக்கும் ஊர்ப் பெயர்கள் என்னென்ன? எனக்குக் கீழ்க்காணும் ஊர்களின் பெயர்கள் பிடித்திருக்கின்றன. தமிழ்ப்பெயர்கள் மட்டுமென்றில்லை. வேற்று மொழிப் பெயர்களும் சொல்லலாம். பனிப்புலம் புகலிடவனம் பூநகரி ஆலங்கேணி பாலாவி அன்புவழிபுரம் மலைமுந்தல் உப்பூறல் ஈரமடு நிலாவெளி கல்லாறு எழுவான்கரை தாழங்குடா மரப்பாலம் வாழைச்சேனை அமிர்தகழி பூமுனை குருமண்காடு தீர்த்தக்கரை கல்வயல் மணல்காடு பச்சிலைப்பள்ளி மணல்க்குடியிருப்பு தண்ணிமுறிப்பு பொன்னகர் ஆலையடிவேம்பு வீரமுனை