Skip to main content

Posts

Showing posts from August 7, 2016

நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்காக்க எதை விடுத்துச் செல்லப்போகிறோம்?

தமிழ்நாட்டின் ஒரு துணுக்குப் பத்திரிக்கையின் செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. சுற்றுலாத்தளமொன்றில் பரிசல் கவிழ்ந்து குடும்பத்தினர் அறுவர் பலியாகியுள்ளனர். அதற்குக் காரணமாக அவர்கள் மகிழ்ந்திருந்த பொழுதொன்றில் கையடக்கத் தொலைபேசிக் கமெராவில் செல்ஃபிக்கள் எடுக்க முனையும் போது பரிசலின் சமநிலை குழம்பி பரிசல் கவிழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.  அதில் பத்து மாதக் குழந்தையொன்றும் அடக்கம். மேலும் இளந்தம்பதிகளும் குழந்தைகளும் இருந்துள்ளனர். மிகவும் துன்பியல் செறிந்த செய்தி இது. இச்செய்தி பகிரப்பட்ட தொணி, செல்ஃபிக்களால் உயிருக்கு ஆபத்து என்பதே. அச்செய்தியின் கீழ் ஏராளமானோர், செல்ஃபி மோகத்தினால் உயிர் பலி, செல்ஃபி அவசியம் தேவையா என்றெல்லாம் கருத்திட்டிருக்கிறார்கள்.  மனிதர்கள் இரண்டு வகை. ஒருவகை பழைய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டாடுபவர்கள். பண்பாட்டில் இல்லாதவை அறங்களுக்கு ஒவ்வாதவை என்பவர்கள். இது பெரும்பாலும் பழையவர்களின் குணம். அடுத்த வகை எது தற்போதைய நடைமுறையோ அதை மட்டும் உள்வாங்கிக் கொள்பவர்கள். இது பெரும்பாலும் புதியவர்களின் குணம். இதில் பழையவர்கள் காரண காரியமில்லாமல் புதியன புகுதலை வெறுப்பவர்கள்