Skip to main content

Posts

Showing posts from 2011

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி

குழந்தைகளுக்காக எழுதுதல்.

இலக்கியங்கள்   மர்மங்களாக பெரியவர்களுக்கு இருக்கும் சமயம் , குழந்தைகளுக்கு அவை இனிப்புகளைப் போல அன்றன்றே தீர்ந்து விடுபவையாக இருக்கின்றது. எல்லாக் காலங்களிலும் குழந்தைகள் தாங்கள் வளர்பவர்கள்   என்பதை   அடிப்படையாக   வைத்துச்   செயல்ப்படுவதில்லை என்பதுவே இதற்கான   மேலோட்டமான காரணமாகும். குழந்தைகள்       தமக்கான   சமுகத்தை   தம்மூடாகவோ ,         பெரியவர்கள்   ஊடாகவா   பார்க்கிறார்கள்   என்பதில்   குழந்தைகளுக்கான   இலக்கியத்தின் தேவை   பெரியவர்களிடம்   நிறைந்து   கிடக்கின்றது. குழந்தைகள் எதனைத் தேடுகிறார்கள் என்பதை பெரியவர்களால் ஒரு போதும் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்கள் குழந்தையாக இருந்த போதும் , அவர்கள் குழந்தைகள் , குழந்தைகளாக இருக்கும் போததுமான இரு பெரும் தேடல்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறதில்லை. சமுகத்தின் வளர்ச்சியும் , சமுகத்தில் குழந்தைகளைப் பார்க்கும் கோணமும் , வர்க்கங்களின் வித்தியாசமும் ஒரு குழந்தையின் தேடலை வேறுபடுத்தும். இன்று வரைக்கும்   வன்னியில் குழந்தைகள் ஒன்று   சேர்ந்து   ' அட்டலங்க்காய் புட்டலங்க்காய் ' விளையாடுவதையும் , கொழும்பில் எனது பெ

அப்பா, நீங்கள் கையாலாகாதவரா?

இரண்டு கலைகளை ஒன்றாக நேசிப்பதையிட்டு, ஒன்றுக்கு நிறம் பூசுதலையும், இன்னொன்றுக்கு நிறம் மக்கி விடுதலையும் பிரிவினையாகக் கொண்டிருக்கிறேன். இரு தெரிவுகளையும்  பல் தேர்வுக்கோட்டு வினாவைப் போல் நன்னாங்கு விடைகளை கொடுத்து தெரிவு செய்கிறேன். விடைப்பரப்பு தெளிவில்லாது போகுமானால், குதிரையோடுதலையும் வழக்கமாகக் கொள்வேன். தேடலுக்கு அப்பால் உள்ள புண்ணிய நதிக்கரையில் எனது கலைகளது தெரிவுகள் விரிந்துகொண்டிருந்தது. அப்பா ! திருத்த முடியாத உங்கள்  மகள் கனவுகளில் இருந்து  மீளப் படக் கூடியவள் என்று எப்போதாவது நினைக்கிறீர்களா? பூமியின் நடுவே தொலைந்து போன சிறிய மின்கம்பிகளைப் பரிசோதிக்கப் போவதாய் உங்கள் கடைசி மகள் கூறிக் கொண்டு ஆய்வுகூடமொன்றை சொந்தமாய் அமைக்கையில் நீங்கள் ஏன் தடுக்கவில்லை ?  விஞ்ஞானிக் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சந்தோசத்திலிருந்து அப்போதெல்லாம் நீங்கள் மீளவில்லையா? எனது பிறப்பிலிருந்த கயமையை நான் உதாசீனப்படுத்தக் கூடாதென்று நினைத்தீர்களா? பாய்மரக் கப்பல்களைப் பின்னிக் கொண்டு நான் கடல் கடந்து போவேன் என்று சொன்ன போது, நீங்களேன் , கு

Lullaby for you இரண்டோ மூன்றோ கடைசித் தாலாட்டுக்கள் ....

தாலாட்டு என்பது எல்லா நாகரீகத்தினதும் மிக அடிப்படையான வளர்ச்சியையும்,எல்லாக்கலாசார மக்களதும் உருவகங்களைக் காட்டக் கூடிய மிகச் சிறிய பொக்கிஷம். தமிழிலே எழுந்த இயல்பான தாலாட்டுப் பாடல்கள் வாய் மொழியூடாக சொலவடைகளை இணைத்து எழுந்தவை. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மற்றும் பாரசீய மொழிகளிலும் அவ்வாறே ஆயினும் அங்கு தொட்டில்ப் பாடல்கள் என்று ஆங்கில ஆக்கத்தில் அழைக்கப் படும் இவற்றை எழுதிய,இசைவடிவமைத்தவர்களைப் பற்றிய குறிப்புக்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு பிற்கால  பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுந்த குழந்தைப் பாடல்களுக்கு மட்டுமே அதற்கான ஒரு சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்க, கிழக்குப் பிராந்தியங்களில் இவாறான தகவல்கள்  ஏராளமாக நூற்றாண்டு வரிசைப்படிக் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஒரு நாகரிக சமுகத்தின் வளர்ச்சி நிலையாக தாலாட்டுப் பாடல்களைக் கொள்ளுவதே பொருத்தமானதாகும். எவ்வளவோ காலங்களுக்குப் பின் தாலாட்டுப் பாடல்கள் பற்றி தேவையற்ற  எண்ணக்கரு இன்றைய காலையில் விரிவுரையில் இருக்கும் போது  ஒரு வித்தியாசமான மனநிலையில் வந்தது. காலங்காலமாய் நான்

சில புகைப்படங்களும், பாடல்களும்

வெட்டியா இருக்கும் போது, எட்டின தூரத்தில இருக்கிற Zoo க்கு போயிட்டு வாறது வழக்கம். அப்பப்ப கிளிக்கினதுகள் தான் இவை. கீழே சுட்டிகளில் தந்திருக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே படங்களைப் பாருங்கள். ராரே ராபி.... மாத்தளன் பாடல்   அகர் பேவா துஜ்கோ...   வரம் தந்த சாமிக்கு... பூந்தளிர் ஆட...   என்டே ஸ்வப்னத்தின்...   ஒர்மகளே கைவள... பனி விழும் மலர் வனம்... பனி விழும் இரவு... தென்மதுரைச் சீமையிலே... பட்டுக்கோட்டை பாடல் உன்னையறிந்தால்..நீ உன்னையறிந்தால் தமிழே தேனே...